எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு குற்றச்சாட்டு: அனில் அம்பானி தரப்பு நிராகரிப்ப...
Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மியூசியமாக மாற்றிய நபர்
மகாராஷ்டிராவின் புனே நகரம் வாகனங்களுக்குப் புகழ் பெற்றது. புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் ஒருவர் தனது கார் கேரேஜ் முழுக்க ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வரிசையாக நிறுத்தி இருக்கிறார்.
யோகன் பூனாவாலா என்ற அந்த நபர் புனேயைச் சேர்ந்த பூனாவாலா குருப் நிறுவனங்களின் தலைவர் ஜவேரி பூனாவாலாவின் மகன் ஆவார். இவருக்குத் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திலும் கணிசமான பங்கு இருக்கிறது.
யோகன் பூனாவாலாவிற்கு உலகம் முழுவதும் உள்ள பிரபல கார்களைச் சேகரிப்பதுதான் பிரதான பொழுதுபோக்கு ஆகும். அவரிடம் பல்வேறு வகையான 22 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கிறது.

இது தவிர லம்போர்கினிஸ், ஃபெராரிகள் மற்றும் பென்ட்லிகஸ் மற்றும் ரூ.22 கோடி மதிப்புள்ள பாண்டம் VIII EWBம் பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பயணம் செய்யும் ரேங்க் ரோவர் என உலகில் உள்ள அனைத்து விலையுயர்ந்த கார்களையும் தனது கேரேஜில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
உலகம் முழுவதும் பிரபலமான 100 ஆடம்பர கார்கள் யோகன் கேரேஜை அலங்கரிக்கின்றன. இதற்காக ஜெனிவாவில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில் 2023ம் ஆண்டின் சிறந்த கார் சேகரிப்பாளர் என்ற பட்டம் யோகனுக்கு வழங்கப்பட்டது. அதோடு உலகில் புராதான மற்றும் ஆடம்பர கார்கள் என அனைத்து வகையான மாடல்களையும் கொண்ட 100 கார்கள் வைத்திருப்பவர்கள் பட்டியலிலும் யோகன் பெயர் இடம் பெற்று இருக்கிறார்.
இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம் பெற்று இருக்கும் ஒரே நபர் இவர் மட்டுமே. 53 வயதாகும் யோகன் 1990களில் கார்களைச் சேகரிக்கும் பணியைத் தொடங்கினார். அப்போதுதான் யோகனுக்கு முதல் முறையாக ஒரு கார் கிப்ட்டாக கிடைத்தது. மிச்செலியை யோகன் திருமணம் செய்தபோது அவருக்கு பெண் வீட்டார் குடும்பத்தில் இருந்து பஞ்ச்கோட் பாண்டம் 3 கார் அவரது கேரேஜிற்கு வந்தது.

அனைத்து கார்களின் பதிவு எண்களும் அவரது பெயர் எழுத்துக்களான YZP கொண்டதாக இருக்கின்றன. மகாராஜாக்கள், ஷேக்கள், நவாப்கள், ஜனாதிபதிகள், போப்பாண்டவர் பயன்படுத்திய கார்களும் யோகன் கேரேஜை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. 1979ம் ஆண்டு இங்கிலாந்து ராணி பயன்படுத்திய கார் கூட யோகனிடம் இருக்கிறது.
யோகனிடம் இருக்கும் ஒவ்வொரு காருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அனைத்து வகையான கார்கள் மட்டுமல்லாது யோகனிடம் சொந்தமான விமானம் மற்றும் சொகுசு ஹெலிகாப்டரும் இருக்கிறது.
மும்பையில் ரூ.8,500 கோடி மதிப்புள்ள பங்களா வீடு இருக்கிறது. அந்த வீட்டை இப்போது யோகன் கார் மற்றும் கலை மியூசியமாக மாற்றி இருக்கிறார். அவரது காரைப் பார்க்கவே ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.