Career : இன்டர்வியூவில் செலக்ட் ஆக வேண்டுமா... 'இந்த' ஆராய்ச்சி ரொம்ப ரொம்ப முக்கியம் பாஸ்!
நேர்காணலுக்கு செல்லும் அனைவரும் 'செல்ஃப் இன்ட்ரோ', 'வேலை சம்பந்தமான விஷயங்களை' விழுந்து விழுந்து தயார் செய்துகொண்டு போவார்கள். இவை முக்கியம்தான். ஆனால், இதை விட முக்கியம் நமக்கு வேலை கொடுக்கும் நிறுவனம். அதனால், எந்தவொரு நேர்காணலுக்குச் சென்றாலும் நிறுவன ஆராய்ச்சி (Company Research) செய்வது மிக மிக முக்கியம்.
இது என்னவோ புதிதாக பயங்கரமாக இருக்கிறது என்று நினைத்துகொள்ள வேண்டாம். எந்த நிறுவனத்தின் நேர்காணலுக்குச் செல்கிறோமோ, 'அந்த நிறுவனம் எந்தப் பணியை செய்கிறது?', 'அந்த நிறுவனத்திற்கு யார் யார் வாடிக்கையாளர்கள்?', 'அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ யார்?' போன்ற நிறுவனம் சம்பந்தமான அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், அவர்களது சமூக வலைதளங்களில் இருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்டுகளை நீங்கள் பக்காவாக அப்டேட் ஆகியிருங்கள்.
நீங்கள் நிறுவனத்தை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும்போது, நேர்காணல் எடுப்பவர் இம்பிரஸ் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்... அதே அளவுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
ஒவ்வொரு முறையும் ஒரே ரெஸ்யூமை பயன்படுத்தாமல் நிறுவனத்திற்கு ஏற்பவும், நேர்காணல் எடுக்கும் போஸ்ட்டிற்கு ஏற்பவும் ரெஸ்யூம்களை மாற்றுவது மிக மிக அவசியம்.
நிறுவனம் பற்றி எப்படி தெரிந்துகொள்கிறீர்களோ, அதேப்போல அந்த போஸ்ட்டிற்கு தேவைப்படும் முக்கிய திறன்கள் உங்களிடம் இருந்தால் அதை மிஸ் செய்யாமல் ரெஸ்யூமில் சேர்த்துவிடுங்கள்.