Champions Trophy: ``நிறைய துன்பங்களை எங்க நாடு சந்திச்சுருக்கு,ஆனா..."- பாக் கேப்டன் முகமது ரிஸ்வான்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது.
1996 க்குப் பிறகு 29 வருடங்கள் கழித்து தற்போதுதான் பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.

இரு நாடுகளுக்கிடையேயான உறவைக் காரணம் காட்டி பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தது. அங்கு செல்ல மறுத்ததால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் வகையில் ஐ.சி.சி ஏற்பாடு செய்திருக்கிறது. இன்று மதியம் 2.30 மணிக்கு கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “ 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் மிகப்பெரிய ஒரு நிகழ்வு நடக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை அனைத்து நாட்டு மக்களும் கண்டு ரசிக்க வேண்டும்.

நிறைய துன்பங்களை எங்கள் நாடு இதுவரை சந்தித்திருக்கிறது. இப்போது அதனை மறந்து கொண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2009 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையைப் போலவே இந்தத் தொடரிலும் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs