செய்திகள் :

Chandrachud: `விநாயகர் சதுர்த்திக்கு பிரதமர் வந்தது ஏன்?’ ஒய்வு பெரும் முன் விளக்கும் CJI சந்திரசூட்

post image

பிரதமர் மோடி கடந்த செப்டம்பரில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்துகொண்டது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் அந்த சமயத்தில் விவாததைக் கிளப்பியது. அப்போது, `நீதிபதிகள் தங்கள் மத அடையாளங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்தக்கூடாது. நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட செயல்கள் நீதி வழங்குவதில் குறுக்கிடக்கூடும் என்ற எண்ணத்தை மக்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்தக்கூடாது.' என்று பலதரப்பிலிருந்தும் வாதங்கள் வந்தன.

தலைமை நீதிபதி சந்திரசூட்

இவ்வாறிருக்க, தனியார் ஊடகத்திடம் பேசுகையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்திருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ``பிள்ளைகளின் திருமணம், பாண்டிகைகள் போன்ற நிகழ்வுகளின்போது மட்டுமே தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளின் இல்லங்களுக்குப் பிரதமர், முதல்வர்கள் செல்வார்கள். மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொள்வதைத் தவிர வேறு எந்த விஷயமும் விவாதிக்கப்படுவதில்லை.

சந்திரசூட், மோடி

அரசியல் நிர்வாகத் தலைவர்கள் மத்தியில் எந்தவொரு விவாதத்துக்கும் அப்பால் நீதித்துறை சார்ந்த விஷயங்களை ஒதுக்கிவைக்கும் அளவுக்கு நீதிபதிகளிடம் முதிர்ச்சியிருக்கிறது. நெறிமுறை மிகவும் கண்டிப்பானது. நீதித்துறை விவகாரங்கள் ஒருபோதும் அரசியல் நிர்வாகத் தலைவர்களுடன் விவாதிக்கப்படுவதில்லை. ஜனநாயக ஆட்சியமைப்பில் எங்களின் கடமைகள் எங்களுக்குத் தெரியும். அதேபோல், அவர்களின் கடமைகள் அவர்களுக்குத் தெரியும்" என்று தெரிவித்திருக்கிறார்.

நவம்பர் 10-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிவியிலிருந்து சந்திரசூட் ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Chandrachud: "என் தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படட்டும்" - தலைமை நீதிபதியாக சந்திரசூட்டின் இறுதி உரை

இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 09-ம் தேதி பதவியேற்றார். அவரின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான பதவிக்காலம் 2 ஆண்டுகள் பணி நிறைவு வரும் ஞாயிற்றுக்கிழமையுடன்... மேலும் பார்க்க

Chandrachud: ``நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கெதிரான முடிவைக் குறிக்காது'' - சந்திரசூட்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தேர்தல் பத்திரம் திட்டம், ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்புகள், கருத்துகள் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம... மேலும் பார்க்க

விருதுநகர்: போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல்; வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 6 பேருக்குக் கடுங்காவல்

விருதுநகர் மாவட்டத்தில், வங்கி வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து, லட்சக்கணக்கான ரூபாய் பண மோசடி செய்த வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 3 பேருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை வ... மேலும் பார்க்க

Chandrachud: "உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே சந்திரசூட் சிதைக்கிறார்" - மூத்த வழக்கறிஞர் காட்டம்

தேர்தல் பத்திரம் வழக்கு, மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் அளித்த தீர்ப்புகள் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட... மேலும் பார்க்க

`மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்; பயிற்சி மையங்களில் ஒரே சீரான தரநிலைகள் வேண்டும்' - உச்ச நீதிமன்றம்

டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த சூழலில் ஜூலை 27-ம் தேதி, பேராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் அடித்... மேலும் பார்க்க

`இந்தியாவின் மதச்சார்பின்மையில் விருப்பமில்லையா?' - சுப்பிரமணியன் சுவாமி வழக்கில் உச்ச நீதிமன்றம்

சட்ட மேதை அம்பேத்கர் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, 1950-ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தின் முகப்புரையில், ``இறையாண்மை (Sovereign) ஜனநாயக (Democratic) குடியரசு... மேலும் பார்க்க