செய்திகள் :

Coolie - War 2: `சாரி சாரி, என் தவறுதான்..!’ - ரஜினி குறித்து ஹிருத்திக் ரோஷன் சொன்ன ஃப்ளாஷ்பேக்

post image

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது `கூலி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமான வெளியாகிறது. பாலிவுட்டில் அதே நாளில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆரின் 'War 2' திரைக்கு வருகிறது. இதனால் இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் கிளம்பி சமூகவலைதளங்களில் அதுதொடர்பான பதிவுகள் வைரலாகிய வண்ணமிருந்தன.

Coolie - War 2

கோலிவுட்டில் எப்படி ரஜினிக்கு மவுசு அதிகமோ, அப்படித்தான் பாலிவுட்டிலும். தனது ஆரம்ப காலங்களிலேயே பாலிவுட்டில் Andhaa Kaanoon (1983)', 'Billa', 'Thee', 'John Jani Janardhan' உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'Phool Bane Angaray', 'Hum', 'Bhagwan Dada' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 'Bhagwan Dada' படத்தில் ரஜினியிடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஹிருத்திக் ரோஷன்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஹிருத்திக் ரோஷன், "ரஜினி சார் ஒரு பக்காவான ஜென்டில்மேன். 'Bhagwan Dada' படத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போது படப்பிடிப்பில் நிறைய தவறுகள் செய்துவிடுவேன்.

ஹிருத்திக் ரோஷன், ரஜினி

என்னால் காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், என் தவறை மறைத்து 'சாரி சாரி சாரி, இது என்னுடைய தவறுதான்...' என ரஜினி சார் என்னை காப்பாற்றுவார். அது இன்னும் என் நினைவில் இருக்கிறது. " என்று ரஜினியுடனான நெகிழ்ச்சியான தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.

மும்பை: மன்னத் பங்களாவைக் காலி செய்த ஷாருக்கான்; கவலையில் உள்ளூர் வியாபாரிகள்; காரணம் என்ன?

மன்னத் பங்களாபாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்திராவில் உள்ள தனது மன்னத் பங்களாவிலிருந்து சமீபத்தில் காலி செய்துவிட்டு அருகில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மாடிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு... மேலும் பார்க்க

Urvashi Rautela: `பத்ரிநாத்தில் எனக்கு கோயில்' - நடிகையின் பேச்சால் மதகுருக்கள் கோபம்; என்ன நடந்தது?

உத்தராகாண்டில் தனது பெயரில் கோவில் இருப்பதாக நடிகை ஊர்வசி ரவுடேலா கூறியதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன. பத்ரிநாத் பகுதியில் வசிக்கும் மக்கள், சமய அதிகாரிகள் மற்றும் மத குருக்கள் இதற்கு எதிர்ப்பு ... மேலும் பார்க்க

Anurag Kashyap: `சாதி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார்?’ - பூலே பட விவகாரத்தில் அனுராக் காட்டம்

அனுராக் கஷ்யப் பூலே திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகத்தினர் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். சமூக சீர்திர... மேலும் பார்க்க

சிக்கந்தர் விமர்சனம்: ராஜா கதையல்ல, ராஜா காலத்து கதை; எல்லா சீனையும் சாமிக்கு விட்டுட்டா எப்டிஜி?

ராஜ்கோட்டின் கடைசி மகாராஜாவாக இருக்கிறார் மக்களால் 'சிக்கந்தர்' என்றழைக்கப்படும் சஞ்சய் (சல்மான் கான்). அவருடைய மனைவியாக அன்பு மழையைப் பொழிகிறார் ராணி சாய்ஶ்ரீ (ராஷ்மிகா மந்தனா).அமைச்சர் ராகேஷின் (சத்... மேலும் பார்க்க

சிக்கந்தர் : 'இந்தப் படத்தில் பணியாற்றியது கனவு போல் இருக்கிறது' - நெகிழும் சந்தோஷ் நாராயணன்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'சிக்கந்தர்'. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் சி... மேலும் பார்க்க

`ஒரு பாட்டில் ரூ.6300' - நடிப்பு, கிரிக்கெட்டை தொடர்ந்து மது விற்பனையிலும் ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைப்படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பது, ஐ.பி.எல். கிரிக்கெட் என பல தொழில்களை செய்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் தொழில்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்து வருகிறது.... மேலும் பார்க்க