செய்திகள் :

Corruption: `லஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகள்..' -இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

post image

2024-ம் ஆண்டிற்கான சர்வதேச ஊழல் குறியீட்டில் (Corruption Perceptions Index - CPI) இந்தியா 96-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளின் ஊழல் லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்  (Transparency International) ஒவ்வோர் ஆண்டும் ஆய்வு மேற்கொள்கிறது. 180 நாடுகளுக்கும் 0 - 100 வரை மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தரவரிசை பிரிக்கப்படுகிறது. 2022-ம் ஆண்டு இந்தியா 40 மதிப்பெண்களையும், 2023-ம் ஆண்டு 39 மதிப்பெண்களையும் பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியிருக்கிறது.

Corruption

அதில், இந்தியா 38 மதிப்பெண்களை மட்டுமே பெற்று 93-வது இடத்திலிருந்து 96 வது இடத்துக்கு சரிந்திருக்கிறது. நமது அண்டை நாடுகளான சீனா 76-வது இடத்தையும், பாகிஸ்தான் 135-வது இடத்தையும், இலங்கை 121-வது இடத்தையும், வங்காளதேசம் 149-ம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

ஊழல் குறைந்த நாடு என்ற பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பின்லாந்து இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் மூன்றாம் இடத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஊழல் ஒரு ஆபத்தான பிரச்னையாக மாறிவரும் அதே வேளையில், பல நாடுகளில் ஊழலுக்கு எதிராக நல்ல மாற்றமும் ஏற்பட்டு வருகிறது. ஊழல் அதிகமாகுவதற்கு குறைந்து வரும் ஜனநாயகம், உறுதியற்ற தன்மை, மனித உரிமை மீறல்கள் முக்கிய காரணங்களாகும். சர்வதேச சமூகமும், ஒவ்வொரு நாடும் ஊழலைக் கையாள்வதை ஒரு முதன்மையான மற்றும் நீண்டகால முன்னுரிமையாக மாற்ற வேண்டும். சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுவதற்கும், அமைதியான, சுதந்திரமான, நிலையான உலகத்தைப் பாதுகாப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Dog Bite: `நாய் கடி பிரச்னையில் தமிழ்நாடு 2-வது இடம்..' -அரசு சொல்வதென்ன?

இந்தியாவில் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சுமார் 22 லட்சம் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் ... மேலும் பார்க்க

ஹஜ் பயணம்: `குழந்தைகளை அழைத்துச் செல்ல தடை' - காரணம் என்ன? - விளக்கும் சவுதி அரேபியா!

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளின் ஒன்று மக்கா செல்வது. வசதியும், உடல் ஆரோக்கியமும் இருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரும் கண்டிப்பாக மக்கா சென்று ஹஜ் செய்ய வேண்டும். இந்த நிலையில், சவூதி அரேபியா அரசு இந்த ஆண்டு... மேலும் பார்க்க

செங்கோட்டையன் வீட்டில் குவிந்த அதிமுக நிர்வாகிகள் -அவரச ஆலோசனையா? -பரபரப்பில் அதிமுக

அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமை... மேலும் பார்க்க

ஊட்டி: `விடைத்தாள் இல்லை என தேர்வு ரத்து’ - கலெக்டர் தலைமையில் இயங்கும் பள்ளியின் அவலம்

பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் தொடங்கப்பட்ட பிரீக்ஸ் மெமோரியல் பள்ளி 150 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த பள்ளியில் விடைத்தாள் வாங்க பணம் இல்ல... மேலும் பார்க்க

செங்கோட்டையன் வீட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு -பின்னணி என்ன?

அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், ... மேலும் பார்க்க

Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, கனடா மீது வரி, மெக்சிகோ மீது வரி, சீனா மீது வரி... என்று வரிகளை அடுக்கிக்கொண்டு போனார் ட்ரம்ப்.அப்போது அவர் பேசுகையில், "இந்தியா, அமெரிக்கா பொருட்கள் மீது அ... மேலும் பார்க்க