CSK vs RCB : 'பதிரனாவை மீண்டும் அழைத்து வருகிறோம்!' - சர்ப்ரைஸ் கொடுத்த ருத்துராஜ்
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை சென்னை அணி வென்றிருக்கிறது. சென்னை அணி முதலில் பந்துவீசப்போகிறது.

சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் பேசுகையில், 'நாங்கள் முதலில் பௌலிங் செய்யப் போகிறோம். இந்த மைதானத்தில் இதுவரை காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் பெரிதாக இல்லை. அப்படி இருந்தாலும் அதை சமாளிக்கும் வகையிக் சில யுக்திகளை வைத்திருக்கிறோம். பீல்டிங்கில் நாங்கள் கொஞ்சம் சரியாக செயல்படவில்லை. பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட வேண்டும். நேதன் எல்லிஸூக்குப் பதில் பதிரனா இன்று ஆடுகிறார்.' என்றார்.
பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் பேசுகையில், 'நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். ஆனால், எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் இருக்காது என நினைக்கிறேன். எங்கள் வீரர்கள் கடந்தப் போட்டியில் சிறப்பாக ஆடியிருந்தனர். ஆனால், ஐ.பி.எல் இல் லீக் போட்டிகள் அத்தனையிலும் சிறப்பாக ஆட வேண்டும்.

கடந்த போட்டியில் 13 வது ஓவருக்குப் பிறகு எங்கள் பௌலர்கள் மீண்டு வந்து போட்டியை இழுத்துப் பிடித்தது அற்புதமாக இருந்தது. சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான போட்டிக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். எங்கள் அணியில் ரசிக் சலாமுக்கு புவனேஷ்வரை எடுத்திருக்கிறோம்.' என்றார்