செய்திகள் :

D54: "புதிய வாய்ப்பு; தனுஷ் சாருடன் நடிக்கிறேன்..." - பிரித்வி பாண்டியராஜன்

post image

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 'D54' படத்தின் பூஜை நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. ‘போர் தொழில்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார்.

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.  இப்படத்தில் மமிதா பைஜு, K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

'Blue Star' படத்தில் பிரித்வி பாண்டியராஜன்

'Blue Star' படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனின் மகன் பிரித்வி பாண்டியராஜன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரித்வி பாண்டியராஜன், "புது நாள், புது வாய்ப்பு. தனுஷ் சார் நடிக்கும் 'D54' படத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

இந்த சந்தோஷமான விஷயத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. வாய்ப்பளித்த இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கு நன்றி. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி" என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Sanjay Dutt: "என்னை லோகேஷ் கனகராஜ் வேஸ்ட் செய்துவிட்டார்; அவர் மீது கோபம்!" - சஞ்சய் தத் கலகல!

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'கே.டி. தி டெவில்'. 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கே.வி.என் தயாரிப்பு நிறுவனம்தான் ... மேலும் பார்க்க

Shilpa Shetty: "விஜய் சாருடன் நடனம்; வடிவேலு சார் கற்றுக் கொடுத்த தமிழ்!" - நடிகை ஷில்பா ஷெட்டி

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'கே.டி. தி டெவில்'. 'ஜனநாயகன்' படத்தை தயாரிக்கும் கே.வி. என் தயாரிப்பு நிறுவனம்தான... மேலும் பார்க்க

Oho Enthan Baby Review: இளமை துள்ளும் காதல் கதையின் ஓப்பனிங்கலாம் நல்லாயிருக்கு... ஆனா ஃபினிஷிங்?

சிறுவயதிலிருந்தே பெற்றோரின் சண்டைகள், அதனால் வீட்டில் நிலவும் பதற்றம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க சினிமாவை தோழனாக மாற்றிக்கொள்கிறான் அஷ்வின் (ருத்ரா). வளர்ந்த பின் சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற... மேலும் பார்க்க

Shruti Haasan: "நான் திருமணத்தை மதிக்கிறேன்; ஆனால்..." - நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

நடிகை ஸ்ருதி ஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்தது குறித்து சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்..பாட்காஸ்டரான யூடிப்பர் ரன்வீர் அலாபாடியுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் பாட்காஸ்டில் உரைய... மேலும் பார்க்க