தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
David Lynch: `ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று படங்கள்'; இயக்குநர் டேவிட் லிஞ்ச் மரணம்!
ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள், சிலப் படங்களின் குணச்சித்திர நடிகர், சிலப் படங்களின் இசையமைப்பாளர் எனப் பல்வேறு திறமைகளுடன் வலம் வந்த இயக்குநர் டேவிட் லிஞ்ச், பல வருட புகைபிடித்தலால் ஏற்படும் நுரையீரல் நோயான எம்பிஸிமாவுடன் போராடி வந்தார். தொடர்ந்து சுவாசிக்க ஆக்ஸிஜன் வைக்க வேண்டிய சூழலில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர், தன் 78-வது வயதில் மரணமடைந்தார். 1977 முதல் திரைத்துறையில் தீவிரமாக ஈடுபட்ட இவரின் The Elephant Man (1980), Blue Velvet(1986), Mulholland Drive (2001) ஆகியப் படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
1990-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் Wild at Heart படத்திற்காக, மதிப்புமிக்க பாம் டி'ஓர் (Palme d'Or) விருதை வென்றார். இவரின் Twin Peak படைப்பு உலகளவில் கவனம் பெற்றது. இதன் இரண்டாம் பாகம், 2017-ல் Twin Peaks: The Return தான் இவரின் கடைசித் திரைப் படைப்பாகும். இவரை கௌரவிக்கும் வகையில், 2020-ம் ஆண்டு ஆஸ்கார், இவருக்கு கௌரவ அகாடமி விருது வழங்கியது.
இவரின் மரணத்துக்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Twin Peaks படத்தின் நட்சத்திரமான நிக்கோலஸ் கேஜ், ``நான் சினிமாவை காதலிக்க முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர்." எனறார்.
திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், "கைவினைக் கலையால் உருவாக்கப்பட்டப் படத்தைப் போன்ற படைப்புகளை உருவாக்கிய, தனித்துவமான, தொலைநோக்கு சிந்தனைக் கொண்ட இயக்குநர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.