செய்திகள் :

Delhi: 'சட்டியில் இல்லை' - பாஜக வாரி வழங்கிய வாக்குறுதிகள்... பட்ஜெட்டில் துண்டு விழுமா?!

post image
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது பாஜக.

பாஜக-வின் இந்த வெற்றிக்கு ஆம் ஆத்மி கட்சி மீது தொடர்ந்து வந்த ஊழல் புகார்கள் ஒரு பக்கம் காரணம் என்றாலும், இன்னொரு பக்கம் அவர்கள் அள்ளி தெளித்த வாக்குறுதிகளும் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்த வாக்குறுதிகள் மிக முக்கியமானவை...

  • மாதா மாதம் பெண்களுக்கு ரூ.2,500;

  • உதவி தேவைப்படுபவர்களுக்கு கே.ஜி வகுப்பு முதல் பி.ஜி வரை இலவச கல்வி;

  • ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், கிக் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.10 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு;

  • 60 வயதுக்கு மேல் உள்ளோர்களுக்கு மாதம் ரூ.2,500 பென்சன் தொகை மற்றும் 70 வயதுக்கு மேல் உள்ளோர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் தொகை;

  • கர்ப்பிணி பெண்களுக்கு மாதம் ரூ.2,500;

  • ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்;

  • ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவச கேஸ் சிலிண்டர்.

இதையும் தாண்டி பல வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்கிறது பாஜக. ஆனால், வாக்குறுதிகள் நிறைவேற்றும் அளவு டெல்லி கல்லாவில் பணம் இருக்கிறதா என்று பார்த்தால், 'இல்லை' என்பது தான் பதில்.

சமீபத்திய தரவுகளின் படி, டெல்லிக்கு வரி மூலம் வரும் வருமானம் ரூ.57,750 கோடி ஆகும். ஆனால், டெல்லியின் மொத்த பட்ஜெட் தொகை ரூ.76,000 கோடி ஆகும்.

இப்போதிருக்கும் திட்டங்களேயே தொடர்ந்து செயல்படுத்த டெல்லி அரசுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வேண்டும். இதுபோக, கட்டமைப்புகள், திடீர் தேவைகள், புதிய திட்டங்களுக்கு இன்னமும் பணம் தேவைப்படும்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இப்போது பாஜக அளித்துள்ள பெண்களுக்கு ரூ.2,500 வாக்குறுதிக்கு மட்டும், ஆண்டுக்கு ரூ.11,000 கோடி தேவை.

இன்னும் உள்ள செலவுகள்...|யமுனை நதி

இன்னும் உள்ள செலவுகள்...

யமுனை நதியை சுத்தம் செய்ய ரூ.8,000 கோடி;

மருத்துவமனைகளை புதுப்பிக்க ரூ.10,200 கோடி;

மெட்ரோ மூன்று மற்றும் நான்காம் கட்ட பணிகளுக்கு ரூ.2,700 கோடி

இப்படி பாஜக அரசின் ஒவ்வொரு வாக்குறுதிகளுக்கும் ஆயிரம் கோடி கணக்கில் பணம் தேவை.

குறைந்த அளவே டெல்லியின் வருமானம் இருக்கும் நிலையில், இந்த வாக்குறுதிகளுக்கு டெல்லி அரசு என்ன செய்யும்...மத்திய அரசின் உதவியை நாடுமா என்பதற்கான பதில் அடுத்த மாதம் தாக்கல் ஆக உள்ள டெல்லி பட்ஜெட்டில் விடை கிடைக்கும்.

சட்டியில் இல்லை...அகப்பையில் எப்படி வரும்?!

Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்

டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இ... மேலும் பார்க்க

Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்லுபடியாகுமா?

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளைச் செய்து வருகிறார். அதில் ஒன்று மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றியது. கடந்த மாதமே செய்தியாளர் சந்திப்... மேலும் பார்க்க

Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" - மாணவர்களுக்கு மோடி அறிவுரை

கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) மாணவர்... மேலும் பார்க்க

Vijay : '2 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய மீட்டிங்' - விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். சந்திப்பின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.விஜய்கட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்யவிருந்த நிலை... மேலும் பார்க்க

”குடமுழுக்கா இல்லை திமுக கட்சிக் கூட்டமா?" - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைச் சாடும் பாஜக; பின்னணி என்ன?

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் குட... மேலும் பார்க்க