ஆதவ் அர்ஜுனா: "விரைவில் அவர்களைச் சந்திப்போம்" - செய்தியார்களிடம் ஆதவ் பேசியதென்...
Diwali Offers: ஏ.சி, டி.வி, மொபைல் போன்... வாங்கலாமா? இ.எம்.ஐ-க்கு பக்கா பிளானிங் அட்வைஸ்
தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ளன.
ஆஃபர்களும், தள்ளுபடிகளும் குவிந்துகொண்டு வருகின்றன. பத்தாதற்கு ஜி.எஸ்.டி வரி வேறு குறைக்கப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி குறைப்பால் ஏ.சி, 32 இன்சுக்கு அதிகமான டி.வி.கள் (எல்.இ.டி. மற்றும் எல்.சி.டி. டி.விக்கள்), மானிட்டர்கள் மற்றும் புரொஜெக்டர்கள், பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களுக்கு விலை குறைந்திருக்கிறது. இவைகளுக்கு இனி ஆஃபர்களும் வந்து குவியும்.
அதனால், 'வாங்கி போட்டுடலாமே?' என்கிற யோசனையில் இருக்கிறீர்களா?

ரெடி கேஷ் இருக்கிறதா?
'ரெடி கேஷ் தயாராக இருக்கிறது. இப்போதே வாங்கிவிடலாம்' என்றால் தாராளமாக வாங்குங்கள். ஆனால், அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையா என்பதை ஒரு முறைக்கு பல முறை யோசித்துப் பார்த்து வாங்குவது நல்லது.
இ.எம்.ஐ தானா?
'ரெடி கேஷ் எல்லாம் இல்லை... இ.எம்.ஐ தான்' என்பவர்கள் கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்...
ரெடி கேஷ், இ.எம்.ஐ என எதுவாக இருந்தாலும், நமக்கு அந்தப் பொருள் தேவையா என்பதை முதலில் பாருங்கள்.
குறிப்பிட்ட அந்தப் பொருள் உடனே தேவையென்றால் மட்டும் வாங்குங்கள். இல்லையென்றால், தேவைப்படும்போது வாங்கிக் கொள்ளலாம்.
பழைய மாடல்...
எலெக்ட்ரானிக் பொருள்களை நீண்ட காலம் பயன்படுத்தாமல் வைத்திருப்பது நல்லதல்ல. அடுத்ததாக, உங்களுக்கு அந்தப் பொருள் தேவைப்படும்போது, நீங்கள் இப்போது வாங்கும் மாடல், பழைய மாடலாக மாறிவிடலாம்.
அதனால், தேவையில்லாத பொருளை இப்போது வாங்காதீர்கள்.
ஆன்லைன் ஷாப்பிங்கா..?
'இப்போதே தேவைப்படுகிறது' என்பவர்கள் இரண்டு, மூன்று பிராண்டுகளில் அலசி ஆராய்ந்து பார்த்து வாங்குங்கள். ஆன்லைன் ஷாப்பிங், ஆப்லைன் ஷாப்பிங் என எதில் விலை உங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால் ரிட்டன் பாலிசி, ரிவ்யூ போன்றவற்றை கட்டாயம் படியுங்கள்.

பயன்படுத்துங்கள்...
இதையெல்லாம் விட, இ.எம்.ஐ தொகையை ஒவ்வொரு மாதமும் சிக்கல் இல்லாமல் கட்டிவிட முடியுமா என்பதை செக் செய்யுங்கள்.
இதுவும் 'ஓகே' ஆகி இ.எம்.ஐ எடுக்கப்போகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். 3 ஆண்டுகால இ.எம்.ஐ எல்லாம் தவிர்த்துவிடுங்கள். எலெக்ட்ரானிக் பொருள்கள், ஹோம் அப்ளையன்சஸிற்கு ஒரு ஆண்டுகால இ.எம்.ஐ திட்டமே சிறந்தது.
சில இ.எம்.ஐகளைத் தேர்ந்தெடுக்கும்போது, சில மாதங்களுக்கு மட்டும் வட்டி இருக்காது. அந்த ஆப்ஷனைப் பயன்படுத்திக்கொள்ளப் பாருங்கள். அதற்குள் முழு இ.எம்.ஐயையும் கட்டி முடிக்க முயற்சி செய்யுங்கள்.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, சலுகைகள், ஆஃபர்கள் என உங்களுக்கு ஏதுவாக எதாவது ஆப்ஷன் இருந்தால், அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மொபைல் போன் போன்றவற்றை அப்கிரேட் செய்கிறேன் என்று இ.எம்.ஐயில் வாங்குவது புத்திசாலித்தனமானது அல்ல. இது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது.
ஆடம்பர பொருள்களை இ.எம்.ஐயில் வாங்குவதைத் தவிர்த்துவிடுவது மிக மிக நல்லது.
ஆனால், மீண்டும்.. மீண்டும்... சொல்வது என்ன என்றால் தேவையிருந்தால் மட்டும் வாங்குங்கள்... தேவையில்லாமல் இ.எம்.ஐயை தலையில் போட்டுக்கொள்ள வேண்டாம் மக்களே.