செய்திகள் :

Doctor Vikatan: இரவு தூக்கத்தில் இழுத்துக்கொள்ளும் விரல்கள்; நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா?

post image

Doctor Vikatan: இரவு தூங்கும்போது கால் விரல்கள் இழுத்துக்கொண்டு போவது போல் ஆகிவிடுகிறது. குறிப்பாக, ஏசி போட்டாலோ குளிரான காலநிலையிலோ இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. அந்தப் பகுதியை நீவி விட்டால் விரல்கள் இயல்புக்கு வந்துவிடுகின்றன. இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா இருக்குமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

நீங்கள் குறிப்பிடும் இந்தப் பிரச்னையை  'நைட் கிராம்ப்ஸ்' (night cramps) என்று சொல்வோம். இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததுதான்.

வெயில் அதிகமுள்ள நாள்களிலும் சரி, குளிர்ச்சியான நாள்களிலும் சரி, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக முக்கியம்.  தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, போதுமான அளவு உப்புச்சத்து எடுக்காமல் விட்டாலும் பிரச்னைதான். அதாவது வெயில் காலத்தில், வியர்வையின் மூலம் வெளியேறும் உப்புச்சத்தை ரீப்ளேஸ் செய்ய வேண்டும். மழை நாள்களிலும், குளிர் நாள்களிலும் தாகம் அதிகமிருக்காது. ஆனாலும், அப்போதும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் நைட் கிராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு, நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் வரலாம்.

உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் நைட் கிராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு, நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் வரலாம்.

அடுத்து உங்கள் உடலில் நுண்ணூட்டச் சத்துகள் குறையும்போதும் இந்தப் பிரச்னை வரலாம். வைட்டமின் குறைபாடு இருந்தாலும் இப்படி வரலாம். அடுத்த காரணம், அதிக நேரம் உழைப்பது அல்லது அளவுக்கதிகமாக ஓய்வெடுப்பது. அதாவது நீண்டநேரம் நின்றதன் விளைவாகவும் விரல்கள் இழுத்துப் பிடிப்பது போல இருக்கலாம். அல்லது கொஞ்சம்கூட உழைப்பே இல்லாமல் ஓய்விலேயே இருந்திருந்தாலும் அதன் விளைவாக இப்படி ஏற்படலாம்.

உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்கள் அறிகுறிகளைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார். நீர்வறட்சி ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓஆர்எஸ் பவுடரை பரிந்துரைப்பார். தவிர, காலையில் தூங்கி எழுந்ததும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கற்றுத் தருவார். இவற்றை எல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உங்களுடைய பிரச்னையிலிருந்து மீள்வீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? - பிரேமலதா சொன்ன பதில்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று (ஜூன் 17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 2016 தேர்தலில் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியை அமைத்ததுப் போல இந்தத் தேர்தலில் விஜய்யை வைத்து ம... மேலும் பார்க்க

``44 டிகிரி வெயிலில் விளையும் ஆப்பிள்; ஏக்கருக்கு ரூ.5 லட்சம்..'' - விவரிக்கும் பொறியாளர்

எஞ்சினியர் டு விவசாயிமகாராஷ்டிரா விவசாயிகள் எப்போதும் விவசாயத்தில் புதுமையை புகுத்துவது வழக்கம். சோதனை அடிப்படையில் வெப்பமான பகுதியில் விளையாத பயிர்களைக்கூட தங்களது பகுதியில் விவசாயம் செய்து பார்ப்பது... மேலும் பார்க்க

US: ஈரான் அச்சுறுத்தல்; பாக்., ராணுவ தளபதிக்கு விருந்து.. ட்ரம்ப் வேலை பலிக்குமா?

பஹல்காம் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா கொடுத்த பதிலடி, இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதலை உருவாக்கியது. இரு நாடுகளும் மே 10, 2025-ம் தேதி பேசி ஒரு முடிவுக்கு வர, தாக்குதல் நிறுத்தத்த... மேலும் பார்க்க

``சேது சமுத்திரத் திட்டத்தை போல கீழடி அறிக்கையில் வஞ்சிக்கிறார்கள்'' - திமுக ராஜீவ் காந்தி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநில மாணவர் அணிச்செயலாளர் ராஜீவ் காந்தி, "உலகிலேயே நாகரீகத்தை மனிதன் கண்டுபிடித்ததற்கு அடையாளம் இரும்பு கண்டுபிடித்ததுதான். அதன்படி சுமார் 5300 ஆண்டுகளுக்கு மு... மேலும் பார்க்க

Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன?

கோடைக்காலங்களில் இடுக்குத்தொடை பிரச்னை அதிகமாக ஏற்படும். தொடையும் அதையொட்டிய இடுக்குப்பகுதியும் உரசி உரசி அரிப்பு ஏற்படும். சொரிந்தால் புண்ணாகி விடும்; எரிச்சல் ஏற்படும்; நடப்பதற்கே சிரமமாக இருக்கும்.... மேலும் பார்க்க

``ஜூலை 9 புதுச்சேரியில் முழு பந்த்'' - அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் அறிவிப்பு

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. அதன்படி புதுச்சேரியில் இந்த பந்த் போராட்டத்தை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி ... மேலும் பார்க்க