செய்திகள் :

Doctor Vikatan: பிரேக்அப் ஆன காதல்; நிச்சயமான திருமணம்... வெஜைனாவுக்கான சர்ஜரி அவசியமா?

post image

Doctor Vikatan:  என் தோழிக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது.  அவளுக்கு இதற்கு முன் காதல் அனுபவமும், அந்தக் காதலருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட அனுபவமும் இருக்கிறது. எதிர்பாராத விதமாக அந்தக் காதல் பிரேக் அப்பில் முடிந்து, வேறொருவருடன் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் கடந்தகால  தாம்பத்திய அனுபவம் கணவருக்குத் தெரியாமலிருக்க, வெஜைனாவில் செய்யப்படுகிற அறுவைசிகிச்சை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறாள். அந்தச் சிகிச்சை அவசியமா...?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

ஹைமன் என்பது பெண்ணின் பிறப்புறுப்பின், அதாவது வெஜைனாவின்  நுழைவாயிலில் இருக்கும் மெல்லிய சவ்வு போன்ற தோல் திசு. இது முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வெஜைனாவின் திறப்பை  மூடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த சவ்வு வித்தியாசமான வடிவம் மற்றும் தடிமனில் இருக்கும்.

ஹைமன் கிழிந்தாலோ அல்லது விரிவடைந்தாலோ வலி அல்லது லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம். ஆனால்,  பெரும்பாலான பெண்கள் இதை உணர்வதில்லை. உடற்பயிற்சி செய்வது, டாம்பூன், மென்ஸ்டுரல் கப் போன்றவற்றைப் பயன்படுத்துதல், மருத்துவ பரிசோதனைகள் அல்லது தாம்பத்திய உறவு போன்ற பல்வேறு காரணங்களால் ஹைமன் கிழியலாம் அல்லது விரியலாம்.

ஹைமன் பகுதிக்கென பிரத்யேக பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஹைமன் டெஸ்ட் என்பது எல்லாப் பெண்களுக்கும் செய்யப்பட மாட்டாது. அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருந்தாலோ, வேறு ஏதேனும் பிரச்னை என்றாலோ மட்டும்தான் ஹைமன் டெஸ்ட் செய்யப்படும். சமீபகாலங்களில்  'ஹைமனோபிளாஸ்டி' (Hymenoplasty ) அல்லது 'ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி' (Reconstructive surgery ) போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். எல்லாப் பெண்களுக்கும் இந்தச் சிகிச்சை அவசியப்படுவதில்லை. 

தாம்பத்திய உறவு தவிர்த்து அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்பதால் பெண்கள் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

திருமணத்துக்கு முன்பு  தாம்பத்திய உறவில் ஈடுபட்ட அனுபவம் பலருக்கும் இருக்கலாம். எதிர்பாராத சூழ்நிலையில் வேறொருவருடன் திருமணம் நிகழும்போது, முந்தைய அனுபவம் தெரியாமலிருக்க, இதுபோன்ற  ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி தேவையா என்ற கேள்வியோடு சிலர் மருத்துவர்களை அணுகுவதுண்டு. தேவையில்லை என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் பதிலாக இருக்கும். செக்ஸ் அனுபவத்துக்கும், ஹைமன் பகுதி கிழிந்தோ, தளர்ந்தோ போவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல தாம்பத்திய உறவு தவிர்த்து அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்பதால் பெண்கள் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. இந்தக் காலத்தில் பல பெண்களும் மென்ஸ்டுரல் கப் பயன்படுத்துகிறார்கள். அதை வேகமாகச் செலுத்திப் பழகியவர்களுக்கும் ஹைமன் பகுதி பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் தோழிக்கு இந்த அறுவை சிகிச்சை அவசியமில்லை என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

IVF சிகிச்சையில் குழந்தைக் கனவு நனவாகுமா..? | பூப்பு முதல் மூப்புவரை

"திருமணமாகி 10 ஆண்டுகளாகிவிட்டன. இருமுறை கருத்தரித்தபோதும் இருமுறையும் உயிருக்கே ஆபத்தான எக்டோபிக் எனும் சினைக்குழாய் கர்ப்பம் என்பதால், இருமுறையும் அறுவை சிகிச்சை, இனி இயல்பாக கருத்தரிக்கவே இயலாத நில... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு: வெற்றி வாய்ப்பு எவ்வளவு; எத்தனை முறை முயற்சிக்கலாம்? | பூப்பு முதல் மூப்புவரை

செயற்கை கருத்தரிப்பு முறைகளில் முதலாவதும் முக்கியமானதுமான, 'Intra Uterine Insemination' எனும் செயற்கை விந்தூட்டல் அல்லது செயற்கை விந்தேற்றல் முறை பற்றி இன்று தெரிந்துகொள்வோம். அதற்குமுன், வரலாற்றின் ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: திருமணம் நிச்சயமான மகளுக்கு திடீரென நின்றுபோன பீரியட்ஸ்: மாத்திரை கொடுக்கலாமா?

Doctor Vikatan: என்மகளுக்கு24 வயதாகிறது. பூப்பெய்தியதுமுதல் இதுநாள்வரை அவளுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகவே வந்துகொண்டிருந்தது. அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். இந்நிலையில் திடீரென ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மாதந்தோறும் பீரியட்ஸ் வலி; வெளியேறாத ப்ளீடிங்.. விசித்திர பிரச்னைக்கு தீர்வு என்ன?

Doctor Vikatan: என்னுடைய தோழியின் மகளுக்கு 12 வயதாகிறது. அவள் இன்னும் பூப்பெய்தவில்லை. ஆனால், மாதந்தோறும் அவளுக்கு பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படுவது போன்ற வலி ஏற்படவே, அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு: கோடிகளில் புரளும் வர்த்தகம்; அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நெறிமுறைகள்!

பன்னிரண்டு மாதங்களுக்கு மேலான பாதுகாக்கப்படாத தொடர் உடலுறவுக்குப் பிறகும், ஒரு தம்பதியருக்கு குழந்தைப்பேறு கிடைக்காத நிலையைத் தான் 'Infertility' எனும் கருவுறாமை நிலை என மருத்துவர்கள் அழைக்கின்றனர். பொ... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதும் ஈரமாக இருக்கும் உள்ளாடை, ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் வயது 42. எனக்கு வெஜைனா பகுதி எப்போதும் ஈரம் கசிந்தபடியேஇருக்கிறது. வெள்ளைப்படுதல் போல அல்லாமல் அந்தக் கசிவு வித்தியாசமாக இருக்கிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போதுஇது தர்மசங்கடத்த... மேலும் பார்க்க