செய்திகள் :

Doctor Vikatan: வேப்பிலையும் மஞ்சளும் சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் குணமாகிவிடுமா?

post image

Doctor Vikatan: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தன் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததாகவும், நான்காவது ஸ்டேஜில் இருந்த புற்றுநோயை குணப்படுத்த வாய்ப்பில்லை என மருத்துவர்கள் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து தன் மனைவிக்கு மஞ்சள், வேப்பிலை போன்றவற்றைக் கொடுத்து குணமாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் செல்வராஜ்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் செல்வராஜ்.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளால்தான் குணமடைந்திருக்கிறார். நவ்ஜோத் குறிப்பிட்டுள்ளபடி இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பது, எலுமிச்சை நீர், மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமெல்லாம் புற்றுநோய்க் கட்டிகள் குணமாகாது.

புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்கள் எல்லாம் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளின் மூலம்தான் குணமடைகிறார்கள். இவர்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினரும் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் குணமடைகிறார்கள்.

இன்னொரு பிரிவினர் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றுவது, எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி எடுத்துக்கொள்வது போன்றவற்றை மட்டும் பின்பற்றுபவர்கள். அவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைப்பதில்லை. அத்தனை பேரும் உயிரிழக்கிறார்கள். நான்காவது பிரிவினர், இவற்றில் எதையுமே பின்பற்றாதவர்கள். அவர்களும் உயிர் பிழைப்பதில்லை. 

வேப்பிலை

அந்த வகையில் கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி போன்றவற்றை எடுத்துக்கொள்பவர்களும், இதே சிகிச்சைகளோடு கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்களும் புற்றுநோயிலிருந்து மீள்கிறார்கள்.  வெறும் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மட்டுமோ, அல்லது  எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவை மட்டுமோ புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்தாது.

நவ்ஜோத் சிங் குறிப்பிட்டுள்ளபடி இத்தகைய தவறான செய்திகளைக் கேள்விப்படுகிற மக்கள்,  புற்றுநோய் பாதிக்கும் பட்சத்தில்  அதற்கான நவீன மருத்துவ சிகிச்சைகளை நாடாமல், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள் போன்ற விஷயங்களை நாடிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தவறான பரப்புரைகள் தவிர்க்கப்பட வேண்டும்.  இத்தகைய தவறான தகவல்களை நம்பி, புற்றுநோயாளிகள் சிகிச்சையை தாமதிக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்நாள் குறையும் என்பதை மறக்கக்கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

APOLLO: இந்தியாவில் முதன் முறையாக முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் வெற்றிகர சிகிச்சை

இந்தியாவில் முதன் முறையாக அப்போலோ கேன்சர் சென்டர் – ல் நாட்பட்ட வலிக்கான நிவாரண மேலாண்மையில் முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் வெற்றிகர சிகிச்சை ஓமன் நாட்டைச் சேர்ந்த 30 வயதான நோயாளிக்கு பு... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒரு வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... Kawasaki பாதிப்பு.. தீர்வு என்ன?

Doctor Vikatan:என் நண்பனின் குழந்தைக்கு ஒரு வயதாகிறது. அடிக்கடி காய்ச்சல் வந்தது. மருத்துவமனையில் அட்மிட் செய்து எல்லா சோதனைகளும் செய்தார்கள். கடைசியில் கவாஸகி ( Kawasaki disease) என்ற பிரச்னை பாதித்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் 6 வயதுப் பேரனுக்கு காலையில் எழுந்தவுடன் நெஞ்சிலிருந்து கோழை கோழையாக வருகிறது. இருமல், மூக்கிலிருந்து சளி வருவது எதுவும் இல்லை. தினமும் காலையில் மட்டுமே கோழை பிரச்னை வருகிறது. இதற்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்கமின்மை பிரச்னை.... தற்காலிகமாக தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: என் வயது 45. கடந்த சில மாதங்களாக எனக்கு சரியான தூக்கம் இல்லை. இது என் இயல்பு வாழ்க்கையைப்பெரிதும் பாதிக்கிறது. தற்காலிகமாக தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வதுதீர்வாக இருக்குமா... அது பழ... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?

Doctor Vikatan:என் மகனுக்கு 20 வயதாகிறது. அவனுக்கு 10 நாள்களுக்கொரு முறை வாயில் புண்கள் வருகின்றன. என் கணவருக்கும் இதே பிரச்னை இருக்கிறது. வாய்ப்புண் என்பது பரம்பரையாகத் தொடருமா? இதற்கு நிரந்தர தீர்வு... மேலும் பார்க்க

`எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்' நோயாளி, முன்னாள் அமைச்சர் விமர்சனம்... மருத்துவ அதிகாரி விளக்கம்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிபாண்டி. இவர் உணவகம் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், காளிபாண்டி டூவீலரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்தில... மேலும் பார்க்க