செய்திகள் :

Dragon: "நட்பு, நண்பர்கள்தான் நான் இந்த மேடையில் இருக்கக் காரணம்" - நெகிழ்ந்த விஜே சித்து

post image
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் இம்மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருந்தது. இதில் `டிராகன்' படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் 'தனது வளர்ச்சிக்கு நண்பர்கள்தான் காரணம்' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் பிரபல யூடியூபரும், நடிகருமான விஜே சித்து.

டிராகன்

யூடியூப் சேனல் ஆரம்பித்து 2 லட்சம் சப்ஸ்கிரைபர் இருந்தபோதே நடிக்கக் கூப்பிட்டார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. எங்க சேனலோட 11வது சப்ஸ்கிரைபர் அஸ்வத் ப்ரோதான்.

முதல் நாள் கதை கேட்கும்போதே இங்கிலீஷ்ல பேசினார். எனக்கு ஒன்னும் புரியல. சரி நம்ம ஹாலிவுட் படத்துல நடிக்கப் போறோம்னு நினைச்சுக்கிட்டேன். செட்டுக்குப் போனா அங்கயும் கேமரா மேனும், இயக்குநரும் இங்கிலீஷ்லயே பேசுறாங்க. எதோ ஜாக்கி ஜான் படம் படசெட்டப் பார்த்த மாதிரி இருந்தது.

வி.ஜே.சித்து

இதுக்கு முன்னாடி ஒரு 2 படம் பண்ணினேன் செட்ல எது கேட்டாலும் கிடைக்காது. சாப்பாடுகூட நம்மதான் எடுத்துட்டுப் போகணும். இந்தப் படத்துல 'ஏ ஜி எஸ்' நிறுவனம் நல்லா சாப்பாடு போட்டாங்க. என்ன கேட்டாலும் கிடைச்சது. பிரதீப் ப்ரோ நிறைய சாப்பிடுவார், ஆனா ஃபிட்டா இருப்பார்.

எங்க அப்பா இன்னும் நான் படத்துல நடிக்கிறேன்னு நம்பல. 'வீட்டுல நடிப்ப, இப்போ கேமரா முன்னாடி நடிக்கிற அவ்வளவுதான்'னு சொன்னார்.

வி.ஜே.சித்து, ஹர்ஷத்

நட்பு, நண்பர்கள்தான் நான் இந்த மேடையில் நிற்கக் காரணம். என் வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் நண்பர்கள்தான் காரணம். எங்களை சப்போர்ட் பண்ண அத்தனைபேரும் எங்களின் நண்பர்கள்தான் அவர்களுக்கு நன்றி. எங்களை முழுமையாக நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்த அஸ்வத்திற்கு நன்றி" என்று பேசியிருக்கிறார்.

பேபி அண்ட் பேபி விமர்சனம்: குழந்தை மாறிப் போனதுக்கு இவ்ளோ அக்கப்போரா? காமெடியாவது பாஸாகிறதா?

சென்னை விமான நிலையத்திலிருந்து கோவைக்குச் செல்வதற்காகக் கிளம்பும் சிவாவும் (ஜெய்), மதுரைக்குச் செல்வதற்காகத் தயாராகும் குணாவும் (யோகி பாபு) தங்களது மனைவி குழந்தையுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ... மேலும் பார்க்க

2K Love Story Review: பார்த்துப் பழகிய கதை; பெயரளவில் மட்டுமே இருக்கும் `2கே வைப்ஸ்'!

2கே இளைஞர்களான கார்த்திக்கும் (ஜெகவீர்), மோனியும் (மீனாட்சி கோவிந்தராஜன்) இணைந்து 'ப்ரி வெட்டிங் ஃபோட்டோஷூட்' நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். பள்ளிக் காலத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்களான இருவரும... மேலும் பார்க்க

காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்: பால்புதுமையினர் குறித்து அவசியமானதொரு உரையாடல்; சினிமாவாக எப்படி?

தன் காதலைத் தாயார் லட்சுமியிடம் (ரோகிணி) தயங்கிக்கொண்டே சொல்கிறார் சம்யுக்தா (லிஜொமோல் ஜோஸ்). எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது காதலனை, மதிய விருந்துக்கு வீட்டிற்கு அழைத்து வருமாறு சொல்கிறார் லட... மேலும் பார்க்க

STR 49 Update: சிம்புவுடன் நடிக்கிறாரா சந்தானம்? - படத்தில் இணையும் வைரல் ஸ்டார்; லேட்டஸ்ட் அப்டேட்

கடந்த பிப்ரவரி 3ம் தேதி அன்று தன் பிறந்தநாள் ஸ்பெஷலாக மூன்று பட அறிவிப்புகளை வெளியிட்டார் சிலம்பரசன். கமலுடன் 'தக் லைஃப்' படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்து 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிரு... மேலும் பார்க்க

NEEK: ``தனுஷ் சார் வேகமாக வேலை செய்யக்கூடிய ஒரு இயக்குநர்!'' - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் டீம்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் இம்மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இந்தப் படத்தில் நடித்திருக்கும் இளம் புயல்கள் அனைவரும் புரோமோஷன் பணிகளி... மேலும் பார்க்க

காதல் ஒழிக : `சீமான் இயக்கம், இளையராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு’ - பார்த்திபனின் நினைவுகள்

உலக காதலர்கள் எல்லாம் காதலர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், பல ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இளையராஜா இசையில், சீமான் இயக்கத்தில் தான் நடிக்கவிரு... மேலும் பார்க்க