ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
ECR: காரில் பெண்களை துரத்தும் இளைஞர்கள்; கண்டிக்கும் கட்சிகள்; என்ன நடந்தது? - காவல் துறை விளக்கம்
சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் வரும் பெண்களை, மற்றொரு காரில் துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபடும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், அந்தக் காணொலியில் பெண்களின் காரை இடைமறித்து, காரின் கதவைத் திறக்கச் சொல்லி மிரட்டுவது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கூடுதலாக, பெண்களைத் துரத்திய அந்த இளைஞர்களின் காரில் தி.மு.க கொடி பறப்பது அரசியல் சர்ச்சையாகக் கிளப்பியிருக்கிறது. இந்தக் காணொலியை அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட பிற கட்சிகள் தங்களின் சமூகவலைதளங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 29, 2025
அவர்களிடம் இருந்து தப்பித்த…
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "ஈ.சி.ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் துரத்தும் வீடியோவைப் பார்க்கும்போது பதறுகிறது. தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளது என்பதற்கு இந்த ஈ.சி.ஆர் சம்பவம் ஓர் உதாரணம்" என்று கூறியிருக்கிறார்.
பா.ம.க தலைவர் அன்புமணி, "சமூக விரோதிகளுக்கு துணிச்சல் எவ்வாறு ஏற்பட்டது? சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-29/sqmz4x4b/GicrW2faEAAz0T0-1.jpg)
இந்நிலையில் "சென்னை ஈ.சி.ஆர் சாலையில் இளைஞர்களின் காரை பெண்களின் கார் இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்றதால், அந்த இளைஞர்கள் அந்தப் பெண்களின் காரை துரத்திச் சென்றுள்ளனர். பிரச்னையில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம்" என்று சென்னை கிழக்குக் கடற்கரை கானாத்தூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs