EICMA 2024: ராயல் என்ஃபீல்டு Flying Flea C6 எலெக்ட்ரிக்!
நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நம் ஊர் நிறுவனங்கள் பல தங்களுடைய வாகனங்களை ரிவீல், லாஞ்ச் செய்து கலக்கி வருகின்றன.
அந்தக் காலத்தில் Flying Flea என்று ஒரு 125 சிசி பைக் வெற்றிகரமாக விற்பனையாகி வந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த சமயங்களில் இந்த பைக்கின் பங்கு ராணுவ வீரர்களுக்குப் பெரிதும் உதவியது. இதற்குப் பெருமை சேர்க்கும் விதமாகத்தான் இந்த Flying Flea எனும் பெயரைத் தன் எலெக்ட்ரிக் பிராண்டுக்குச் சூட்டியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். Flying Flea-வின் பல அம்சங்கள் இந்த C6 பைக்கில் இருப்பதுபோல் இதன் டிசைனை வடிவமைத்துள்ளார்கள்.
இந்த C6 பைக்கின் ஃப்ரேம், முழுக்க அலுமினியத்தால் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இன்னொரு ப்ரீமியமான விஷயம் - இதன் TFT டேஷ்போர்டு. புதிய ஸ்விட்ச் கியர்கள் இதில் வழங்கப்படும்.
ஸ்விட்ச்கள் மட்டுமல்ல; இதன் எல்இடி ஹெட்லைட்டும் வேறெந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இல்லாதவையாக இருக்கிறது. முன், பின் என இரண்டு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக் இருக்கிறது.
இதன் டயர்கள் மிகவும் ஒல்லியாக இருக்கின்றன. எலெக்ட்ரிக்குக்கு இது போதும்னு நினைத்துவிட்டதோ ராயல் என்ஃபீல்டு! ஆனால், இதில் குறைந்த Rolling Resistance இருப்பதாகச் சொல்கிறது அந்நிறுவனம். அதனால், சிட்டிக்குள் இதை ஓட்ட சூப்பராக இருக்கலாம். பாபர் ஸ்டைலில் சோலோ சீட்டரைக் காட்சிப்படுத்தி இருந்தாலும், இதில் பில்லியன் சீட்டும் ஆப்ஷனலாக வழங்கப்படும். இது அக்டோபர் 2025-ல் லாஞ்ச் ஆகலாம் என்று தெரிகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...