மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
Electric Vehicle: 2024-ல் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை 33.8% அதிகரிப்பு
எலெக்ட்ரிக் டூவீலருக்கான வரவேற்பு கடந்த வருடம் இந்தியாவில் அதிகரித்து வருவதை ஆண்டின் இறுதியில் வெளியாகும் சேல்ஸ் சார்ட் காட்டுகிறது.
ஓலா, பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அபரிமிதமான வளர்ச்சியை பஜாஜ் அடைந்துள்ளது. பஜாஜின் Chetak மாடல், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 76 சதவிகிதம் அளவுக்கு விற்பனையில் அதிகரித்துள்ளது. டிவிஎஸ் 40 சதவிகிதமும், ஏத்தர் 59 சதவீதமும் விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளன.
Vahan தரவுகளின்படி 2024-ல் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக விற்பனையான EV இருசக்கர வாகனங்கள் 11,07,976. முந்தைய ஆண்டின் விற்பனையான 8,27,892-ஐ விட இந்த எண்ணிக்கை 33.8 சதவீதம் அதிகம். ஓலா இந்தியா முழுவதும் அதிகம் விரும்பப்படுகிற பிராண்டாக உள்ளது. ஒட்டுமொத்த சேல்ஸில் 32.2% பங்கு ஓலாவுடையது. டிவிஎஸ் 2,17,809 யூனிட்கள் விற்பனை செய்து இரண்டாமிடத்திலும் பஜாஜ் 1,92,655 யூனிட்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஏத்தர் 14.2 சதவீத விற்பனை பங்குடன் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.
அரசு EV-களுக்கு கொடுத்து வருகிற FAME-II மானியத்தை குறைப்பதாக அறிவித்தபோதும் இந்த சேல்ஸ் ட்ரெண்ட் உயர்ந்துள்ளதை தரவுகள் காட்டுகின்றன. பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயனர்கள் பார்க்க தொடங்கியுள்ளதும் EV சேல்ஸ் அதிகரிக்கக் காரணம். டிசம்பர் மாத விற்பனை தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஓலா -1452, டிவிஎஸ் -1790, ஏத்தர் -1495, பஜாஜ் -696 யூனிட்கள் விற்பனை செய்துள்ளன. ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் இவை முறையே 18%, 19%, 25%, 14% அளவுக்கு டிசம்பரில் மட்டும் விற்பனையைக் கொண்டுள்ளன.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...