செய்திகள் :

Eng vs Ind: "தோனியாகவோ, கோலியாகவோ சுப்மன் கில் ஆக முடியாது; ஏனெனில்.." - ஹர்பஜன் கூறும் காரணம் என்ன?

post image

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு, கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய ஒரு சோதனைத் தொடராக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது.

டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக இந்திய அணியை முதலிடத்துக்குக் கொண்டு சென்ற தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்குள் ஆக்ரோஷ அணுகுமுறையைப் பாய்ச்சி தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக அணியை முதலிடத்தில் வைத்திருந்த கோலி ஆகியோர் அலங்கரித்த கேப்டன் பதவி என்பதால் இப்போதே கில்லின் ஒவ்வொரு அணுகுமுறையும் முன்னாள் கேப்டன்களுடன் ஒப்பிடப்படுகிறது.

Shubman Gill - சுப்மன் கில்
Shubman Gill - சுப்மன் கில்

குறிப்பாக, பேட்டிங்கில் கோலியின் இடத்தில் இறங்குவதாலும், களத்தில் அவ்வப்போது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாலும் அடுத்த கோலி இவர்தான் எனப் பேசப்படுகின்றன.

இந்த ஒப்பீடுகளே கில் கில்லாகச் செயல்படுவதற்கு அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தோனியாகவோ கோலியாகவோ கில் ஆக முடியாது எனக் கூறியிருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், "ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசமான அணுகுமுறை இருக்கும்.

தோனி, கும்ப்ளே, கங்குலி, கபில்தேவ் ஆகிய அனைவரும் வெவ்வேறு விதமானவர்கள்.

எல்லோருக்கும் வித்தியாசமான குணமும் பாதையும் இருக்கும்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

பிரசன்னா அல்லது சாக்லைன் முஷ்டாக் போல நான் பந்துவீச விரும்பினால் அது சாத்தியப்படாது.

கில் தனக்கென்று ஒரு பாணி கொண்டிக்கிருக்கிறார். அவரால் கங்குலியாகவோ, தோனியாகவோ, கோலியாகவோ ஆக முடியாது.

அப்படி ஆக வேண்டிய அவசியமும் இல்லை. இந்தியாவை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றல் அவருக்கு உள்ளது" என்று கூறினார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2 - 1 என இந்தியா பின்தங்கியிருக்கும் நிலையில், களத்தில் ஒரு கேப்டனாக சுப்மன் கில்லின் அணுகுமுறை குறித்து தங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

பட்டோடி டிராபி பெயர் மாற்றம் குறித்து மௌனம் களைத்த ஆண்டர்சன்... சச்சின் பற்றி என்ன கூறினார்?

இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடர் கடந்த 2007 முதல் பட்டோடி டிராபி தொடர் என்று அழைக்கப்பட்டு வந்தது.இவ்வாறிருக்க, தற்போது இங்கிலாந்து நடந்துகொண்டிருக்கும் தொடர... மேலும் பார்க்க

Ind vs Pak: `ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்!' - போட்டி ரத்து குறித்து நிர்வாகம்

அனைத்து சர்வதேச அணிகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் WCL போட்டி இங்கிலாந்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆ... மேலும் பார்க்க

Eng vs Ind: "பும்ரா ஆடுகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல; காரணம்..." - கிரெக் சேப்பல் சொல்வது என்ன?

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி மிக இக்கட்டான சூழலில் சிக்கும்போதெல்லாம் தனியாளாகப் போட்டியை வென்று தரக்கூடிய நட்சத்திர பவுலராக பும்ரா திகழ்கிறார்.ஆனால், அதுவே அவரது ஃபிட்னஸ் மீதான அழுத்தமாகவும் மாறியி... மேலும் பார்க்க

Andre Russell: "இந்தியாவுடனான அந்த செமி பைனல்தான் என் கரியரின் பெஸ்ட் மொமென்ட்" - பகிரும் ரஸல்

இந்தியாவில் 2016-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஐ.சி.சி தொடர்.தோனி கேப்டனாக விளையாடிய கடைசி ஐ.சி.சி தொடரான அதில், வங்கதேசத்துக்கெதிரான ஆட்டத்தில் கடைசி... மேலும் பார்க்க

"நானும் தோனியும்தான்..." - 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் தேர்வானது பற்றி மனம் திறந்த கேரி கிர்ஸ்டன்!

தோனி தலைமையிலான இந்திய அணி யுவராஜ் சிங் இல்லாமல் 2011-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருக்குமா என்றால் நிச்சயம் வாய்ப்பில்லை அல்லது கடினம் என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கும்.அந்தத் தொடர... மேலும் பார்க்க

Virat Kohli: "அவர் மீண்டும் டெஸ்ட் விளையாட வர வேண்டும்..." - முன்னாள் வீரர் மதன் லால் அழைப்பு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஓய்வைத் திரும்பப்பெற்றுவிட்டு களத்துக்குத் திரும்ப வேண்டுமென குரல் கொடுத்துள்ள... மேலும் பார்க்க