மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
EPS: "45 நிமிடங்கள் பேசினோம்" - அமித் ஷாவைச் சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
இத்தகைய சூழலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறிவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று (மார்ச் 25) திடீரென டெல்லிக்கு விசிட் அடித்தனர்.
அதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டார்.
இதனால், 2021 சட்டமன்றத் தேர்தலைப் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமையப்போகிறது என்று பேச்சுக்கள் பரவத் தொடங்கின.
இந்நிலையில், டெல்லியில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்து அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``மத்திய உள்துறை அமைச்சரை அவரின் இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம்.
குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம்.

மேலும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும் என்றும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படவிருப்பதாகத் தமிழக அரசு செய்திகள் வெளியிடுகிறது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிதான் கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்.
மேலும், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்.

கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைக்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.
45 நிமிடங்கள் பேசினோம். அதில், அரசின் திட்டங்களில் மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். கூட்டணி வேறு, கொள்கை வேறு" என்று விளக்கினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs