இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்
F77 EV Bikes: 6 மாவட்டங்களில் பல்லாயிரம் கி.மீ பேரணி நடத்திய மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள்!
இந்தியாவின் அதிவேகமான எலெக்ட்ரிக் பைக்கான அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) இந்திய ராணுவத்துடன் இணைந்து ராணுவ வீரர்களை கெளரவிக்கும் முன்னெடுப்பை நடத்தி முடித்துள்ளத்து.
இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ அதிகாரிகள், அல்ட்ராவயலட்டின் EV பைக்கான F77 பைக்குகளில் பேரணியாக 5 நாள் சென்றுள்ளனர்.


கிட்டத்தட்ட 6,000 கிமீ கடந்துள்ள இந்த பேரணி 3,000 வீரர்களை ஒன்றிணைத்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களான திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, கோவை ஆகிய இடங்களில் இந்த படை பேரணி நடத்தியுள்ளது.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கும் மரியாதை அளிக்கும்விதத்தில் இந்த பேரணியை நடத்தியுள்ளது அல்ட்ராவயலட். அவர்களுடன் அதே இடத்தில் கலந்துரையாடலும் தேவைகள், நிறைகள், குறைகள் கேட்டறியப்பட்டதுடன் தீர்வுக்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அல்ட்ராவயலட்டின் CEO மற்றும் இணை நிறுவனருமான நாராயணன் சுப்ரமணியன் பேசும்போது, “உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் எங்களின் நோக்கம் என்பது அச்சமற்ற, போராடும் குணம் கொண்ட, குறிக்கோள் நிறைந்த இந்தியாவிடமிருந்து பெறப்பட்டது. நமது ராணுவத்தின் துல்லியம், செயல்திறன், அர்ப்பணிப்பு ஆகிய ஆற்றலாலே வடிவமைக்கப்பட்டது இந்த F77. ஆகவே இந்த முன்னெடுப்பை ராணுவத்துடன் இணைந்து நாங்கள் மேற்கொண்டது எங்களுக்கு கிடைத்த கெளரவம்” என்றார்.
அல்ட்ராவயலட், அதிகபட்ச வேகம் ஒரு மணி நேரத்துக்கு 155 கிமீ வேகம் செல்லக்கூடியது. 0விலிருந்து 100 கிமீ வேகத்தை 2.8 நொடிகளில் தொடும் என்கிறார்கள். 10.3 கிலோவாட் பேட்டரி திறன் கொண்ட இந்த பைக் 40.2 ஹெச்பி ஆற்றல் கொண்டது. 100 என்எம் டார்க் உற்பத்தி செய்கிறது. ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 323கிமீ தூரம் செல்ல முடியும் என கிளைம் செய்கிறார்கள். ஸ்டாண்டர்ட், ரெக்கான் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த எஃப்77இன் எக்ஸ் ஷோரூம் விலை, ரூ.2.99 லட்சம் முதல் ரூ.4.28 லட்சம் வரை உள்ளது.