செய்திகள் :

Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

post image

சிவப்பு அரிசியில் என்னென்ன சத்துகள் உள்ளன? நம் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.

சிவப்பு அரிசியை (பிரவுன் ரைஸ்) தீட்டப்படாத அரிசி என்றும், முழு அரிசி என்றும் சொல்வோம். இதன் கெட்டியான வெளித் தோலுக்கு (உமி) அடுத்ததாக மெல்லியதாக சிவப்பு நிறத்தில் மேல் தோல் (தவிடு) இருக்கும். இதை நீக்கி, பலமுறை தீட்டப்பட்டு அனைத்துச் சத்துக்களும் இழந்த பின் கிடைப்பதுதான் நாம் வழக்கமாகச் சாப்பிடும் வெள்ளை அரிசி. சிவப்பு அரிசியில், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன. வெள்ளை அரிசியில் பட்டைத்தீட்டும்போது இவை வெளியேறிவிடுவதால், இந்தச் சத்துகள் மிகமிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. தானிய வகைகளில் வைட்டமின் ஈ இந்த சிவப்பு அரிசியில் மட்டும்தான் உள்ளது. நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவேதான் இந்த சிவப்பு அரிசி ஓர் முழுமையான தானியமாக இருந்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Red rice

நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், செரிமானம் சுலபமாகும். இந்த நார்ச்சத்தானது, புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக்கொள்ளும். இதில் இருக்கும் மாவுச்சத்து, ரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது. சிவப்பு அரிசியில் உள்ள‌ தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

100 கிராம் சிவப்பு அரிசியில் நமக்குத் தினசரி வேண்டிய மாங்கனீஸில் எட்டு சதவிகிதமும், நார்ச்சத்தில் 14 சதவிகிதமும் கிடைக்கிறது. வெள்ளை அரிசிச் சாதம் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்கு இதையும் சாப்பிடலாம். சுவை குறைவாக இருப்பதுபோல தோன்றும். தினசரி உணவில் பழக்கப்படுத்திக்கொள்ள, வெள்ளை அரிசியையும் சிவப்பு அரிசியையும் பாதியாகக் கலந்து சமைத்து சாப்பிடலாம். அந்தச் சுவையும், நிறமும், வாசனையும் பழகிய பிறகு, முற்றிலும் சிவப்பு அரிசியை சமைக்கலாம்.

Rice

சாப்பிடலாம். டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றது என்று ஏசியன் ஆராய்ச்சி சொல்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை அரிசியைவிட சிவப்பு அரிசி பல மடங்கு நல்லது. அரிசி உணவு சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும், இந்த அரிசியால் பிரச்னைகள் எதுவும் வராது என்கிறது அந்த ஆராய்ச்சி.

வெள்ளை அரிசியைவிட சமைப்பதற்கு அதிக நேரம் ஆகும் என்பதால், அரிசியை வேகவைக்கும் முன் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். சமைக்கும்போது ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். சிவப்பு அரிசியில் செய்யும் தோசையும் மிக ருசியாக இருக்கும். இரண்டரை கப் அரிசிக்கு அரை கப் உளுத்தம் பருப்பு என்ற அளவில் சிறிது வெந்தயமும் சேர்த்து அரைத்து, இரவு புளிக்கவைத்து மறுநாள் தோசை செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

US: ``கைகளில் விலங்கு; தண்ணீர், கழிவறைக்கு தடை" -கதறிய மக்கள்; டிரம்ப் செயலால் கொதிக்கும் பிரேசில்

'அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவேன்' - இது தேர்தல் பிரசாரம் முதல் அதிபராகிய இப்போது வரை அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய முழக்கமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் த... மேலும் பார்க்க

Indonesia: ``எனக்கு இந்திய DNA இருக்கிறது; இந்திய இசையைக் கேட்டால் நடனம் வரும்" - இந்தோனேசிய அதிபர்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில், துண... மேலும் பார்க்க

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan:எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்ற... மேலும் பார்க்க

Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூறுவதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பி... மேலும் பார்க்க

``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், முதல்வர் இரங்கல்..

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் கே.எம் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சாதனைகளை செய்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்... மேலும் பார்க்க

``சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' - அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அரிட்டாபட்டி மக்கள்அரிட்டாபட்டி: `பல்லுயிர் பெருக்க தல... மேலும் பார்க்க