செய்திகள் :

Formula 1: '1900 - 2025' - பந்தயக் கார்கள், ரேஸிங் ஸ்டார்ஸ், இனவெறி - ஃபார்முலா 1 பயணம் தெரியுமா?

post image

Formula One (F1) என்பது கார் ரேஸிங்கில் மிகஉயர்வாகக் கருதப்படும் சிங்கிள் சீட்டர் மோட்டார் ரேசிங் போட்டியாகும். இதை FIA எனப்படும் சர்வதேச கார் சங்கம் ஒருங்கிணைத்து நடத்துகிறது.

பல முன்னணி நிறுவனத்தின் கார்கள், ஆட்டோ மொஃபைல் இண்டஸ்ரியல் தங்களின் ஆளுமைகளை காட்டுவதற்காக இதில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நட்சத்திர ரேஸர்களும் 'Driver’s Championship', சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட கார்களும் 'Constructor’s Championship' தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ரேஸர்கள் மற்றும் குழுவினர்

விமானம் பறக்கும் அளவிற்கு மின்னல் வேகத்தில் ஒரு மணிநேரத்திற்கு 350 கிலோமீட்டருக்கு மேல் வேகமாகவும், துல்லியமாகவும், திறமையான ஸ்டிராடஜியுடன் காரை ஓட்டும் 20 ரேஸிங் டிரைவர்கள் பல கட்ட ரேஸிங் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்க அனுமதிகப்படுகின்றனர். இவர்கள் அணிக்கு 2 பேர் என 10 அணிகளாக போட்டியில் களமிறங்குகின்றனர். ஒவ்வொரு அணிக்குப் பின்னாலும் டயர் மாற்றுபவர்கள், காரின் தொழில்நுட்பத்தை கண்காணிப்பவர்கள், மெக்கானிக், இன்ஜினியர்கள் என தனிக்குழு இருக்கிறது.

மூன்று கட்டங்களாக நடைபெறும் F1

பயிற்சி (Practice), தகுதிச்சுற்று (Qualifying), ரேஸ் நாள் (Race Day) என மூன்று கட்டங்களாக இந்த ரேஸ் நடைபெறுகிறது.

பயிற்சியில் 'FP1, FP2, FP3' என மூன்று பயிற்சி கட்டங்கள் இருக்கின்றன. கார் செட்டிங்குகள், டயர் அளவு, எரிபொருளின் எடை, காற்றழுத்தம், காரின் தொழில்நுட்பங்கள் என அனைத்தும் இந்த பயிற்சி கட்டங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

தகுதிச்சுற்றில் Q1, Q2, Q3 என மூன்று சுற்றாக முதற்கட்ட ரேஸ் நடைபெறுகிறது. அதில் நேரத்தின் அடிப்படையில் கார்களை தேர்வு செய்து, குறைந்த நேரத்தில் மூன்று சுற்றுகளையும் முடித்த கார்கள் ரேஸிங் ட்ராக்கில் முதல் இடத்திலும், அடுத்த குறைந்த நேரத்தில் இருக்கும் கார்கள் இரண்டு, மூன்று என அடுத்தடுத்த இடங்களில் இரண்டு இரண்டு கார்களாக ஒன்றன்பின் ஒன்று நிறுத்த தீர்மானிக்கப்படுகின்றன. இதை 'Pole Position' என்று கூறுகிறார்கள்.

ரேஸ் நாளில் இந்த 'Pole Position' அடிப்படையில் கார்கள் நிறுத்தப்படுகின்றன. களத்தைப் பொறுத்து 50 முதல் 70 சுற்றுகள் (laps) வரை இருக்கும். உதாரணமாக மொனாக்கோ: 78 சுற்றுகள், பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்: 44 சுற்றுகள், மியாமி: 57 சுற்றுகள் என களத்திற்குக் களம் சுற்றுகள் மாறுபடுகின்றன. சுற்றுகள் மாறினாலும் மொத்தமாக 305 கிலோமீட்டர் ரேஸிங் தூரம்.

PIT Stop-ல் நிறுத்தி குறைந்தது ஒருமுறையேனும் டயர்களை 2 நொடிக்குள் மாற்ற வேண்டும். ரேஸின் துல்லியம், நிதானம், வேகம் என்பதன் அடிப்படையில் டயர்கள் மாற்றப்படும். துல்லத்திற்கு ஒருவகையான டயர், வேகத்திற்கு ஒரு வகையான டயர் என மாற்றம் செய்யப்படும். இதுதவிர பல விதிமுறைகள் இருக்கின்றன இந்த F1 ரேஸிங்கில்.

இறுதியாக குறைந்த நேரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சிறந்த நட்சத்திர ரேஸர்களும் 'Driver’s Championship', சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட கார்களும் 'Constructor’s Championship' தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Formula 1

மோட்டார் ரேஸிங்கின் ஆரம்பம்

மோட்டார் ரேஸிங் 1900-களில் ஆரம்பமானது. அந்த சமயத்தில் இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் 'Grand Prix' ரேஸ்கள் பிரபலமாக இருந்தன. இருப்பினும் பந்தயக் கார்களின் வடிவமைப்புகள் வளர்ந்தாலும், பாதுகாப்பு குறைவாகவே இருந்தது அந்தக் காலங்களில். அதனாலே விபத்துகள், உயிர் சேதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அரசு இதுபோன்ற கார் பந்தயங்களுக்கு அனுமதி தராமல் மறுத்து வந்தது.

ஆரம்ப காலங்களில் ஆதிக்கம் செலுத்திய கார் நிறுவனங்களும், ரேஸிங் நட்சத்திரங்களும்

அனைத்து கார் நிறுவனங்களும் ஒன்றிணைந்து பந்தயக் கார்களை பாதுகாப்புடன் வடிவமைத்து சர்வதேச கார் சங்கத்தைத் தொடங்கி, அரசு அனுமதியுடன் அதிகாரப்பூர்வமாக 1950ம் ஆண்டு இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் முதல் கார் பந்தயப் போட்டியை நடத்தியது. அந்தப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த Giuseppe Farina Alfa Romeo முதல் சாம்பியனாக உருவெடுத்தார். Ferrari, Maserati போன்ற இத்தாலிய நிறுவனங்களே கார் பந்தயப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தின.

பிறகு, அர்ஜெண்டீனாவை சேர்ந்த 'Juan Manuel Fangio' என்பவர் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றார். அதேபோல இத்தாலிய கார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை உடைத்து Lotus, BRM, Cooper போன்ற இங்கிலாந்தின் அப்போதைய பிரிட்டிஷ் நிறுவனங்கள் வெற்றிபெற்றன. lotus குழுவிற்காக ரேஸ் செய்த 'Jim Clark' என்பவர்தான் அப்போது பிரபலமாக இருந்தவர்.

Ferrari,

இறந்த பின்பும் வெற்றி பெற்ற ஒரே ரேஸிர் இவர்தான்

அதேபோல இத்தாலியைச் சேர்ந்த 'jochen Rindt' என்பவர் 1970 சீசனில் ஐந்து Grand Prix போட்டிகளில் வென்று உச்சத்தில் இருந்தவர். இத்தாலியின் மொன்சா சர்க்யூட்டில், தகுதிச் சுற்றின் போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். இறந்தபோது 45 புள்ளிகள் எடுத்திருந்தார், சீசனில் மீதமிருந்த ஓட்டுநர்களில் யாரும் அந்த புள்ளிகளை மீற முடியவில்லை. அதனால் இறந்த பின்பும் உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டு சாதனை படைத்தார்.

அயர்டன் சென்னா - மெக்லாரன்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த தனது சிறுவயதிலேயே தன் முதல் சாவ் பாலோ F1 சர்க்யூட் (Sao Paulo F1 circuit) போட்டியிலேயே போல் பொசிஷன் பெற்று எக்ஸ்பர்ட்களோடு மோதி தன் திறமையை நிரூபித்தவர். மெக்லாரன் நிறுவத்தின் கார் சார்பாக களமிறங்கிய சென்னா,1984-ம் ஆண்டு நடந்த ஃபார்முலா 1 போட்டியில் கனமழையிலும் அசுரத்தனமாக ரேஸ் செய்து இரண்டாம் பிடித்தார். இதையடுத்து 1985-ல் நடைபெற்ற போர்ச்சுகல் கிராண்ட் ப்ரி, 1993-ல் நடைபெற்ற ஐரோப்பியன் கிராண்ட் ப்ரி போட்டியின் போதும் கடுமையான மழையிலேயே ரேஸ் செய்து முதல் இடத்தைப் பதிவு செய்து, `கிங் ஆஃப் வெட்ஸ்’ (King of Wets) என மக்களால் புகழப்பட்டார். இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்லாரன் நிறுவனமும் F1சர்க்யூட்டில் கோலோச்ச தொடங்கியது.

1991-ம் ஆண்டு தனது சொந்த நாடான பிரேசிலில் கிராண்ட் ப்ரியில் ரேஸின் இறுதி பகுதியில் இருந்தபோது, கியர் பாக்ஸ் ஃபெயிலியர் ஆகி 6-வது கியரிலேயே ரேஸின் இறுதி லேப்களை ஓட்டி 2.9 விநாடிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்படி கார் பந்தய உலகில் கோலோச்சி வந்த சென்ன 1994ம் ஆண்டு ரேஸிங் செய்தபோதே தனது 34வது வயதில் உயிரிழந்தார்.

Ayrton Senna - Ajith | அயர்டன் சென்னா - அஜித்குமார் செல்ஃபி

2000 ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் எழுந்த Ferrari

2000 முதல் 2004 வரை, Ferrari நிறுவனம்தான் F1 கார் பந்தயத்தில் கோலோச்சியது. மைக்கேல் ஷூமேக்சர் (Michael Schumacher) என்பவரின் தேர்ந்த ரேஸிங்கால் தொடர்ந்து 5 சாம்பியன்ஷிப் வெற்றிகள் கிடைத்தன.

F1 ஹைப்ரிட் யுகம்

2014 முதல், F1 கார் பந்தயத்தில் ஹைப்ரிட் யுகம் ஆரம்பமானது. Mercedes நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்து தங்களின் சக்தி வாய்ந்த 1.6L V6 டர்போ என்ஜின்களை அறிமுக செய்து 'Mercedes AMG Petronas' பந்தயக் கார் மாடலைக் கொண்டு வந்தது. இந்தக் கார் Lewis Hamilton என்பவர் ரேஸிங்கில் 7 உலகக் கோப்பைகளை வென்று Michael Schumacher வின் சாதனையை முறியடித்தது.

2024 F1

2024ம் ஆண்டில் மெக்லரன், மெர்சிடீஸ், ரெட் புல், ஃபெராரி உள்ளிட்ட நிறுவனங்களே முன்னணியில் இருக்கின்றன. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் அதிரடியாக ஃபார்முலா 1 சாம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவருக்குப் போட்டியாக  24 வயது ஆஸ்திரேலியர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி புதிய நாயகன் உதயத்தைக் கண்டுகொண்டிருக்கிறது .

We Race As One - F1-ல் சமத்துவம்

நாளுக்குநாள் பந்தயக் காரிகளின் வடிவமைப்புகள், பாதுகாப்புகள், தொழில்நுட்பங்கள் அசுரத்தனமாக வளர 2022ம் ஆண்டில் புதிய தொழில்நுட்ப விதிமுறைகள் அறிமுகமானது. என்னதான் F1கார் பந்தயம் தொழில்நுட்ப அளவில் வளர்ந்தாலும், நிறவெறி, இன வெறி, பாலின சமத்துவமின்மை பின்தங்கிய நிலையிலேயே இருந்தன. கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட இனத்தவர்கள், பெண்கள் ரேஸிங்கில் மட்டுமல்ல, ரேஸிங்கின் தொழில்நுட்பக் குழுவில்கூட பங்கேற்க முடியாத நிலை இருந்தது.

F1 ஸ்போர்ட் பெரும்பாலாலும் ஐரோப்பிய நாடுகளின் அடிப்படையுடன் இயங்கினாலும், அது உலகளாவிய ரசிகர்கள் கொண்டது என்பதால், சமூக ஒற்றுமையை முன்னிறுத்த வேண்டிய தேவை இருந்தது.

Mercedes End Racism

இந்த பாகுபாட்டை உடைக்க அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் 'We Race As One' என்ற ஒற்றுமை இயக்கத்தை Formula 1 நிறுவனம் 2020ம் அறிமுகப்படுத்தியது. கருப்பின நிறவெறிக்கு எதிராக Mercedes நிறுவனம் கருப்பு கலர் பந்தயக் காரை வடிவமைத்து 'anti-racism, End Racism' என பெயரைப் பொறித்தது. Black Lives Matter போன்ற இயக்கங்கள், நிறவெறி மற்றும் சமூக அநீதிகளை எதிர்த்து உலகம் முழுவதும் எழுச்சி கொண்டது.

Formula 1 ரேஸர்கள், குழுவினர் பலரும் 'anti-racism, End Racism, Black Lives Matter' என பெயரை ஆடைகளில், விளம்பர பேனர்களில் போட்டு விழிப்புணர்வில் ஈடுபட்டனர். 'F1 Engineering Scholarships' போன்ற பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு பெண்கள், கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள், வறுமையில் இருக்கும் திறமையாளர்களுக்கு கல்வி வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் உருவாக்கத் தொடங்கினர்.

2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு சீசனிலும் DEI (Diversity, Equity, Inclusion) அறிக்கை வெளியிடப்பட்டு இன சமத்துவம், பாலின சமத்துவத்தை நிலைநாட்ட புதுப்புது திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ரேஸிங்கிலும், அதன் இன்ஜினியரிங் குழுவிலும் பெண்கள், கருப்பினத்தவர்கள் பலரையும் பங்களிக்கச் செய்ய பல்வேறு திட்டங்கள் ஒவ்வொரு சீசனிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

Formula 1 என்பது வெறும் போட்டி அல்ல, அது திறமையான கார் பந்தய ரேஸர்களை, சிறந்த கார் தயாரிப்பு, தொழிநுட்பங்களையும், கார் நிறுவனங்களையும் வணிகத்தைத்தையும், பாகுபாடின்றி திறமையாளர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் கார்பந்தயத் திருவிழாவாகும்.

உங்களுக்குப் பிடித்த ரேஸர்கள், கார்கள், Formula 1 சம்பவங்கள், சுவாரஸ்யத் தகவல்கள் குறித்து கமெண்டில் சொல்லுங்கள்!

கார் கம்பெனிகளின் எலெக்ட்ரிக் படையெடுப்பு!

மின்சாரக் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான சாய்ஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. அந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது டாடா ஹேரியர்.ev. டாடாவின் மின்சாரக் கார்கள் மீது இரு... மேலும் பார்க்க

Honda: ஹோண்டாவின் லேட்டஸ்ட் எடிஷன்.. அசத்தும் ஸ்டைலில் சிட்டி ஸ்போர்ட் கார் அறிமுகம்!

இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), சிட்டி ஸ்போர்ட் என்ற புதிய எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா சிட்டி செடான்... மேலும் பார்க்க

Toll Tag Pass: அறிமுகமாகும் ரூ.3,000 வருடாந்திர ஃபாஸ்ட் டேக் பாஸ்; எப்போது? யார், யார் பெறலாம்?

'டோல் கேட்' - தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு மிகப்பெரிய சிரமம் என்றே சொல்லலாம். வரிசையில் காத்திருந்து, டோலைக் கட்டி செல்வதற்குள் 'போதும்... போதும்' என்று ஆகிவிடும். இதை எளிதாக்கும் விதமாக, 'ஃபா... மேலும் பார்க்க