175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகி...
Game Changer: `` இந்திய அரசியலின் உண்மையான கேம் சேஞ்சர் பவன் கல்யாண்தான்!'' - ராம் சரண் ஷேரிங்ஸ்
ஷங்கரின் `கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் பிரமாண்டமான ப்ரோமோஷன் நிகழ்வு ராஜமுந்திரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்துக் கொண்டார். துணை முதல்வராக பதவியேற்றப் பிறகு அவர் கலந்துக் கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இதுதான் என்பதால் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிகழ்வில் பேசிய ராம் சரண், ``இந்த நிகழ்வில் கூடியிருக்கும் இந்தக் கூட்டம் ராஜமுந்திரி பாலத்தில் துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் முதல் தேர்தல் பேரணியின்போது கடல் போல திரண்டிருந்த சம்பவத்தை நினைவூட்டுகிறது. இந்த நிகழ்விற்கு வருகை தந்ததற்காக அவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த திரைப்படத்தில் கேம் சேஞ்சராக நடித்திருக்கலாம். ஆனால், பவன் கல்யாண்தான் இந்திய அரசியலில் உண்மையான கேம் சேஞ்சர். அநேகமாக, பவன் கல்யாணை இன்ஸ்பிரேஷனாக வைத்து என்னுடைய இந்த கதாபாத்திரத்தை ஷங்கர் சார் வடிவமைத்திருக்கலாம்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
இவரை தொடர்ந்து மேடையில் பேசிய பவன் கல்யாண், `` ராம் சரணை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவர் ஹாலிவுட்டுக்குச் சென்றுவிட்டார். ஆஸ்கருக்கு சென்றுவிட்டார். அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன். சித்தப்பாவாக இல்லாமல், ஒரு மூத்த சகோதரனாக உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் அதிகமான திரைப்படங்களை திரையரங்குகளில் பார்க்கமாட்டேன். நான் முன்பு சென்னையில் இருக்கும்போது ஷங்கர் சாரின் ஜெண்டில்மென் படத்திற்கு ப்ளாக் டிக்கெட்டில் பார்க்கச் சென்றேன். காதலன் திரைப்படத்தை என்னுடைய பாட்டியுடன் சென்றுப் பார்த்தேன்." என அவர் ஷங்கரை புகழ்ந்தார்.