வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரஷிய ராணுவத்திற்கு ஆட்களை அனுப்பிய கும்பல் கைது!
Gaza - Israel: ``மீண்டும் போர் தொடங்கும் உரிமை இருக்கிறது.." - இஸ்ரேல் பிரதமர் சொல்வதென்ன?
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுடன், 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தப் போரால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிந்தும், லட்சக்கணக்காணவர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தும், முழுவதுமாக பாலஸ்தீனம் நிலைகுலைந்தும் போனது. தொடர்ந்து போர் நிறுத்தம் வேண்டும் என ஐ.நா முதல் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் பொதுமக்கள் காஸா போர் நிறுத்தம் வேண்டும் என வீதிக்கு வந்தார்கள்.
இதற்கிடையில், ஹாமஸ் கைது செய்து வைத்திருக்கும் பணையக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் தரப்பு கேட்டுவந்தது. இந்த நிலையில், காஸாவில் சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன. அத்துடன், இஸ்ரேலியப் பணயக்கைதிகளுக்கு ஈடாக பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பு அறிவித்திருக்கிறது. அமெரிக்காவும் இரண்டு நாடுகளுக்கும் மத்தியஸ்தராக செயல்படும் கத்தாரும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தம், 15 மாத மோதலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 737 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலின் நீதி அமைச்சகம் கூறியது.
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி, "ஆரம்ப 42 நாள் போர்நிறுத்தத்தில் காஸாவில் போராளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 33 பேர் விடுவிக்கப்படுவார்கள்" என்று கூறினார். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன் எக்ஸ் பக்கத்தில், ``ஒப்புக்கொள்ளப்பட்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலைப் பெறும் வரை நாங்கள் போர் கட்டமைப்பைத் திரும்பப்பெற முடியாது. ஒப்பந்த மீறல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது.
எனவே, போர் மீண்டும் தொடங்கினால் அதற்கு ஹமாஸ் மட்டுமே பொறுப்பு" எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``அனைத்து பணயக்கைதிகளும் இஸ்ரேலுக்குத் திரும்பக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அமெரிக்க ஆதரவுடன் போரை மீண்டும் தொடங்கும் உரிமை இஸ்ரேலிடம் இருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.