கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசா...
Gold: `கூமாப்பட்டி மாதிரியே இதுவும் வைரல்' சுவிட்ச் முதல் வாஷ்பேஷன் வரை தங்கம் - ஆச்சர்ய வீடு
தற்போது ஒரு பவுன் தங்கம் வாங்குவதே மிடிஸ் கிளாஸ் மக்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலை எகிறி உள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் வேளையில், தங்கத்தைக் கொண்டு ஒரு வீட்டை அலங்கரித்துள்ளார் இந்தூரைச் சேர்ந்த ஒருவர்.
மத்திய பிரதேசத்தில் இந்தூரைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டுப் பொருட்களை தங்கத்தால் உருவாக்கி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இன்ப்ளுயன்சர் பிரியம் சரஸ்வத், இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு, "இந்தூரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு" என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவின் படி, பிரமாண்ட வீட்டில் நுழைவு வாயிலிலேயே பசுமாடுகளுக்காக மின்விசிறி வசதியுடன் ஒரு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கார்களின் கலெக்ஷனைப் பார்க்க முடிகிறது. 1936 ஆம் ஆண்டு விண்டேஜ் மெர்சிடிஸ் பென்ஸ் உட்பட பல ஆடம்பர கார்கள் உள்ளன.
வீட்டின் சுவிட்ச் தொடங்கி வாஷ்பேஷன் வரை அனைத்து பொருட்களும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வீட்டு உரிமையாளர் கூறுகையில் ”24 கேரட் தங்கம் கொண்டு வீட்டின் பொருட்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டில் மொத்தம் 25 பேர், எங்களுக்காக ஒரு பெட்ரோல் பங்க் மட்டுமே ஒரு சொத்தாக இருந்தது. சாலை போடுதல், பாலம் கட்டுதல் போன்ற அரசாங்க வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்கிறேன். தற்போது 300 அறைகளுடன் கூடிய ஹோட்டல் கட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்” என்று பெருமையாக கூறுகிறார்.
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.