செய்திகள் :

HBD Balayya: 'இந்தியாவின் முதல் Time Travel படம்; இலவச புற்றுநோய் சிகிச்சை' - பாலைய்யா சம்பவங்கள்

post image

டோலிவுட்டின் ஆக்ஷன் நாயகன் பாலைய்யாவுக்கு 65-வது பிறந்தநாள் இன்று. சினிமா, அரசியல் களம் எனப் பாலைய்யா கால் வைத்த இடமெல்லாம் ஜெய்தான்!

குழந்தை நட்சத்திரமாக அவருடைய தந்தை இயக்கத்தின் மூலமாகவே சினிமாவுக்குள் வந்த பாலைய்யா, இன்று 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து டோலிவுட்டின் முக்கியப் புள்ளியாக மிளிர்கிறார்.

இன்று ஆக்ஷன் நாயகனாக பலருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கும் பாலைய்யாவின் கரியரை வெறும் ஆக்ஷன் படங்களை வைத்து மட்டுமே சுருக்கிட முடியாது.

சயின்ஸ் ஃபிக்ஷன், வரலாறு சார்ந்த கதைகள் என அவருடைய படங்கள் பைசா வசூல் படங்களாகத் திரையரங்குகளில் அதிரடி காண்பித்திருக்கின்றன.

Balaiyaa
Balaiyaa

பாலைய்யா என ரசிகர்கள் அன்பாக அழைக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பொயப்பெட்டி ஶ்ரீனு இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் 'அகண்டா 2' படத்தின் அறிவிப்பு வந்திருக்கிறது.

இதே கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு 'அகண்டா' படத்தின் முதல் பாகம் வெளியாகி திரையரங்குகளில் தாண்டவம் ஆடியிருந்தது.

இதைத் தாண்டி, பாலைய்யா இன்னும் சில முக்கியமான இயக்குநர்களுடன் கூட்டணி போடவிருப்பதாகவும் பேச்சுகள் வந்துகொண்டிருக்கின்றன.

பாலைய்யாவின் தந்தை என்.டி.ராம ராவ் சினிமா, அரசியல் என இரண்டிலும் கோலோச்சியவர். அவருக்குப் பிறகு அவரின் பல விஷயங்களை பாலைய்யா அக்கறையாக இப்போது கவனித்துக் கொள்கிறார்.

பாலைய்யா சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஹிந்துப்பூர் தொகுதியில் லோபாக்ஷி திருவிழா நடைபெறும். என்.டி.ஆர் இருந்தபோது வருடந்தோறும் அங்குச் சென்று கிருஷ்ணர் வேடமிடுவார். என்.டி.ஆருக்குப் பிறகு இதைப் பாலைய்யாவும் தொடர்ந்து வருகிறார்.

பாலய்யா
பாலய்யா

வருடந்தோறும் திருவிழா நாட்களில் பாலைய்யா தவறாமல் அட்டென்டென்ஸ் போட்டுவிடுவார். மேலும், என்.டி.ராம ராவின் முதல் மனைவி தாரகம் கடந்த 1985-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டுக் காலமானார்.

அவரின் மரணம் என்.டி.ஆருக்கு அழுத்தமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. பிறகு, ஹைதராபாத்தில் பசவதாரகம் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார்.

என்.டி.ஆரின் மறைவுக்குப் பிறகு, இப்படியான மனிதநேயமிக்க செயல்களை அந்த மருத்துவமனை மூலமாகப் பலருக்கும் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார்.

இன்றைய 2கே கிட்ஸிடம் பாலைய்யா குறித்துக் கேட்டால், "ஆம், தெரியுமே, ஸ்லோவ் மோஷன் நடை போடுவார், வில்லன்களை அடித்துப் பறக்க விடுவார், பொது நிகழ்வுகளில் தக் காட்டுவார்..." என்பது போன்ற விஷயங்களைத்தான் அடுக்குவார்கள். ஆனால், இதே பாலைய்யா வெவ்வேறு பட ஜானர்களையும் தொட்டிருக்கிறார்.

ஆக்ஷன், வரலாற்றுக் கதை, புராணக் கதை, பயோபிக், சயின்ஸ் ஃபிக்ஷன் எனப் பல பக்கங்களிலும் களமாடியிருக்கிறார். சொல்லப்போனால், இந்தியாவின் முதல் டைம் டிராவல் படத்தை டோலிவுட்டில்தான் எடுத்தார்கள்.

அப்படத்தை இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் எடுத்திருந்தார். இதில் நம்முடைய பாலைய்யாதான் கதாநாயகன்.

பாலய்யா
பாலய்யா

அப்படியான படங்களிலும் நடித்து டோலிவுட்டில் தூள் காட்டியிருக்கிறார். ரசிகர்கள் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கணிப்பதில் பாலைய்யா கில்லாடி. அப்படி மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தன்னுடைய படங்களை அமைத்தார்.

ஆனால், 2001-ம் ஆண்டிற்குப் பிறகு மக்கள் எதிர்பார்த்த மாதிரியான ஹிட் படங்கள் எவையும் பாலைய்யாவுக்கு அமையவில்லை. தொடர்ந்து பல்வேறு படங்களில் பாலைய்யா நடித்துப் பார்த்தார்.

ஆனால், அதில் சில படங்களைத் தவிர, பல படங்கள் திரையரங்குகளில் சோபிக்கவில்லை. இப்படியான தொடர் போராட்டங்களுக்குப் பிறகுதான் ஹிட் காம்போவான பொயப்பெட்டி ஶ்ரீனு - பாலைய்யா கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணியின் வெற்றிக் கணக்கு என்றும் மிஸ் ஆனது கிடையாது.

2010-ம் ஆண்டு இந்தக் கூட்டணியின் முதல் திரைப்படமான 'சிம்ஹா' திரைப்படம் வெளியாகி பாலைய்யாவின் கம்பேக் படமாக மிளிர்ந்தது.

ஏற்கெனவே சொன்னதுபோல, பாலைய்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கணித்து படங்களைச் செய்யக்கூடியவர். 'சிம்ஹா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பொயப்பெட்டி ஶ்ரீனுவுடன் கூட்டணி அமைத்தார்.

பாலைய்யா கணித்ததுபோலவே, அவர் போட்ட கணக்கு சரியாக க்ளிக் அடித்தது. சொல்லப்போனால், பாலைய்யாவின் மாஸ் இமேஜை கூட்டியதில் பொயப்பெட்டி ஶ்ரீனுவுக்கு முக்கியமானதொரு பங்கு இருக்கிறது. அதனாலேயே, இவர் மீது பாலைய்யாவுக்கு அதிகளவில் அன்பு உண்டு.

பாலய்யா
பாலய்யா

பொயப்பெட்டி ஶ்ரீனு வரிசையில், டோலிவுட் இயக்குநர்கள் கொண்டன்டராம ரெட்டி, கொடி ராமகிருஷ்ணா ஆகியோரும் இடம் பெறுவார்கள். பாலைய்யாவின் சினிமா கரியரில் மேஜிக் கூட்டியவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள்.

கொண்டன்டராம ரெட்டியும் பாலைய்யாவும் கூட்டணி அமைத்து இதுவரை 13 படங்கள் கொடுத்திருக்கின்றனர். இதில் 9 படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

அதுபோல, கொடி ராமகிருஷ்ணாவும் 7 முறை இணைந்திருக்கிறார். அதில் 6 படங்கள் பிளாக்பஸ்டர் அடித்தன. இவர்களையெல்லாம் பாலைய்யாவின் சினிமா கரியரின் கேம் சேஞ்சர்ஸ் என்றும் சொல்லலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்...' - நடிகர் சிரஞ்சீவி

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது.... மேலும் பார்க்க

Kubera: 'இதனால்தான் சிரஞ்சீவி சாரை எல்லோருக்கும் பிடிக்கும், கமல் சார் ...'- நெகிழும் நாகர்ஜுனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி... மேலும் பார்க்க

" குபேரா படத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தன, ஆனால்.."- ராஷ்மிகா மந்தனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ... மேலும் பார்க்க

Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் - காரணம் என்ன?

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் 'ரெட்ரோ'பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பஹல்காம் ... மேலும் பார்க்க

HIT 3 கதை விவகாரம்: நானி மற்றும் படக்குழுவினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஹிட் 3 திரைப்பட கதைத் திருட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் நானி மற்றும் திரைப்பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹிட் 3 திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என திரைக்கதை ஆச... மேலும் பார்க்க

Kubera: "குபேரா படத்தில் ஹீரோ நான்தான்!" - சக்சஸ் மீட்டில் நாகர்ஜூனா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது 'குபேரா'. இந்தப் படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். Kubera படத்திற்கு நல்... மேலும் பார்க்க