செய்திகள் :

Shankar: " 'கேம் சேஞ்சர்' படம் என் தவறான முடிவு; அதை செய்திருக்க வேண்டும்!" - தயாரிப்பாளர் தில் ராஜூ

post image

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.

ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை.

Game Changer
Game Changer

சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, 'கேம் சேஞ்சர்' படத்தை தயாரித்தது மிகப்பெரிய தவறு எனக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் தயாரிப்பாளர் தில் ராஜூ, "பெரிய இயக்குநர்களுடன் பெரிய படங்களை உருவாக்கும்போது, 100% பிரச்னைகள் எழத்தான் செய்யும்.

எனக்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லோருக்குமே நடக்கத்தான் செய்யும். 'கேம் சேஞ்சர்' படத்தின் எடிட்டர் படத்தின் நீளம் ஒரு கட்டத்தில் நான்கரை மணி நேரமாக இருந்ததாகக் கூறியது உண்மைதான்.

இப்படியான விஷயங்கள் பெரிய இயக்குநர்களுடன் பணிபுரியும்போது நிச்சயம் நடக்கும்.

Dil Raju - Producer
Dil Raju - Producer

எனது திரைப்பட வாழ்க்கையில், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களுடன் நான் இதற்கு முன் பணியாற்றியதில்லை. 'கேம் சேஞ்சர்' எனது முதல் தவறான முடிவு.

நான் ஒப்பந்தத்தில் எனது கருத்துகளை தெளிவாகக் குறிப்பிட்டு, பின்னர் தயாரிப்புக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. அது எனது தவறு." எனப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்...' - நடிகர் சிரஞ்சீவி

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது.... மேலும் பார்க்க

Kubera: 'இதனால்தான் சிரஞ்சீவி சாரை எல்லோருக்கும் பிடிக்கும், கமல் சார் ...'- நெகிழும் நாகர்ஜுனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி... மேலும் பார்க்க

" குபேரா படத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தன, ஆனால்.."- ராஷ்மிகா மந்தனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ... மேலும் பார்க்க

Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் - காரணம் என்ன?

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் 'ரெட்ரோ'பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பஹல்காம் ... மேலும் பார்க்க

HIT 3 கதை விவகாரம்: நானி மற்றும் படக்குழுவினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஹிட் 3 திரைப்பட கதைத் திருட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் நானி மற்றும் திரைப்பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹிட் 3 திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என திரைக்கதை ஆச... மேலும் பார்க்க

Kubera: "குபேரா படத்தில் ஹீரோ நான்தான்!" - சக்சஸ் மீட்டில் நாகர்ஜூனா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது 'குபேரா'. இந்தப் படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். Kubera படத்திற்கு நல்... மேலும் பார்க்க