செய்திகள் :

IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

post image

சென்னை IIT இயக்குநர் காமகோடி சில நாட்களுக்கு முன்பு மாட்டுப்பொங்கல் விழாவில் பசுவின் கோமியம் ஆண்டி-பாக்டீரியல் என்றும் அதன் மருத்துவ குணம் பற்றியும் பேசியிருந்தது பெரும் விவாதமாக எழுந்துள்ளது.

நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையத்தின் தலைவரே அறிவியலுக்குப் புறம்பாக பேசுவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ(எம்) கட்சி காமகோடியை ஐஐடி தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம்இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐஐடி காமகோடி

அவரது அறிக்கையில், "மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனரான காமகோடி அவர்கள் கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். இது ஐ.ஐ.டி. போன்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும், மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும். ஐ.ஐ.டி. இயக்குனரா, ஆர். எஸ்.எஸ். பிரச்சாரகரா? என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது.

ஏற்கனவே காசி தமிழ் சங்கம் என்ற பெயரில் பா.ஜ.க அரசியலுக்கான செயல்பாட்டு களமாக நிறுவனத்தை அனுமதித்தார். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இந்து மதம் அல்லாத பிற மத அடையாளம் கொண்டோர், சமூக நீதி காரணமாக இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தோர் பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை. இயக்குனரின் வெளிப்படையான ஆர். எஸ். எஸ் ஆதரவு பிரச்சாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும்.

பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கும் உரையில் விநாயகர் உருவம் தான் முதல் குளோனிங் என பேசினார். இது வலுவாக எதிர்க்கப்பட்டது. அவர் தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமியம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல. கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உடனடியாக இயக்குனர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். மேலும் இவருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்கள் திரும்ப பெறப்பட வேண்டியவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

பெ.சண்முகம்

மேலும் பாஜக ஆட்சி, ஆய்வு நிறுவனங்களை, இதர தன்னாட்சி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். மையங்களாக மாற்றி வருகிறது என குற்றம் சாட்டியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், காமகோடி ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தை, சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் அந்தஸ்தத்தை பயன்படுத்தி செய்வது, தமிழ்நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது. எனவே சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என ஒன்றிய கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது." எனக் கூறியுள்ளார் பெ.சண்முகம்.

'புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஒன்னும் பண்ண முடியாது' - எஸ்.வி.சேகர் சொல்வதென்ன?

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் பேசியிருக்கிறார்.பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் நேற்று( ஜனவரி 20) போராட்டம் நடத... மேலும் பார்க்க

`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து

47-வது அதிபராக...அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம... மேலும் பார்க்க

AIPOC: அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு; வெளிநடப்பு செய்த அப்பாவு! - காரணம் என்ன?

1921-ம் ஆண்டு முதல் நடந்துவரும் அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடின் (AIPOC) 85-வது மாநாடு பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங... மேலும் பார்க்க

Mahatma Gandhi: ``காந்தி கொலையை ஏற்பாடு செய்தது நேரு" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

சுதந்திர இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி, நாடு சுதந்திரமடைந்த ஆறாவது மாதத்திலேயே நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். வரலாற்றிலும் இதுவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

Donald Trump: `அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இருபாலர் மட்டுமே' - அதிபராக முதல் உரையில் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி இரண்டாவது முறையாக மீண்டும் அதிபராக வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெர... மேலும் பார்க்க