மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
Ilaiyaraaja: `இளையராஜாவுக்கு பாராட்டு விழா' - தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
லண்டனில் கடந்த மாதம் மார்ச் 8-ம் தேதி 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்திருந்தார்.
லண்டனுக்குச் செல்லும் முன், இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து கிளம்பி லண்டன் அப்பல்லோ அரங்கேற்றும் இளையராஜாவிற்கு பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து, கலைஞர் அவருக்குக் கொடுத்த 'இசைஞானி' பட்டத்தையெல்லாம் நினைவு கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதோடு இளையராஜா லண்டன் சென்று சிம்பொனி அரங்கேற்றி திரும்பிய பிறகும், அரசு சார்பில் வாழ்த்தி லண்டலிருந்து திரும்பிய இளையராஜாவை அரசு மரியாதையுடன் வரவேற்றுமிருந்தார்.
அப்போதே இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக மகிழ்ச்சிப் பொங்க அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய சட்டமன்றப் பேரவையில் ஜூன் 2-ம் தேதி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
