செய்திகள் :

Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்யகுமார்

post image
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 தொடர் ஈடன் கார்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தியும் பேட்டிங்கில் அபிஷேக் சர்மாவும் கலக்கினர். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார், 'கோச் கவுதம் கம்பீர் எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.' என பூரித்து பேசியிருக்கிறார்.
SKY

சூர்யகுமார் யாதவ் பேசியதாவது, 'டாஸை வென்று நாங்கள் போட்டியை தொடங்கிய விதமே சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பௌலரும் அவரவருக்கென ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு அதை களத்தில் சிறப்பாகவும் செயல்படுத்தினார்கள். மூன்று ஸ்பின்னர்களை கொண்டு ஆடியதை பற்றி கேட்கிறீர்கள். அதுதான் எங்களின் பலம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கூட அப்படித்தான் ஆடியிருந்தோம். புதிய பந்தில் பந்துவீசும் பொறுப்பை ஹர்திக் ஏற்றுக் கொண்டார். அதனால் என்னால் கூடுதலாக ஒரு ஸ்பின்னரை வைத்து ஆட முடிகிறது. வருண் சக்கரவர்த்தி தன்னுடைய பௌலிங்கை ரொம்பவே எளிமையாக வைத்திருக்கிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கு தெரிகிறது.

அதை மனதில் வைத்துக் கொண்டு தெளிவாக பயிற்சிகளை மேற்கொள்கிறார். அதுதான் அவரை சிறப்பான வீரராக மாற்றுகிறது. அர்ஷ்தீப் சிங் அனுபவத்தின் வழி நிறைய கற்றுக்கொள்கிறார். கூடுதல் பொறுப்புகளையும் தன் மீது சுமந்து கொள்கிறார். கவுதம் கம்பீர் எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

SKY

2024 டி20 உலகக்கோப்பையில் ஆடியதை விட கொஞ்சம் வித்தியாசமாக ஆட வேண்டும் என்பதுதான் எங்களின் திட்டம். பீல்டிங் கோச்சுடன் இணைந்து தீவிரமாக பயிற்சி மேற்கொள்கிறோம். சிறிய வாய்ப்பிருந்தாலும் அதை கேட்ச்சாக மாற்ற கடுமையாக முயற்சிக்கிறோம். அதுதான் எங்களின் பீல்டிங்கை தரமானதாக மாற்றுகிறது.' என்றார்.

Concussion Substitute : 'இந்திய அணி செய்தது சரிதானா?' - விதிமுறை என்ன சொல்கிறது? |Explainer

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இடையே சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை 'Concussion Sub' ஆக இந்திய அணி பயன்படுத்தியிருந்த... மேலும் பார்க்க

Concussion Substitute : 'என்னால் அதை துளி கூட ஏற்க முடியாது!' - கொதித்தெழுந்த பட்லர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டியில் புனேவில் நடந்திருந்தது. அதில், இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் சிவம் துபேக்கு பதில் 'Con... மேலும் பார்க்க

Virat Kohli: ரஞ்சி கோப்பையில் கோலி; அலைமோதிய ரசிகர்கள்; நெகிழ்ச்சியான மைதானம்... | Ranji Updates

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிக்கு எதிராக ரஞ்சி தொடரின் லீக் போட்டி நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிப் போட்டியில் டெல்லி அணிக்காக கோலி இறங்குவதால் மைதானத்தி... மேலும் பார்க்க

IndvEng: 'தேவையற்ற ஷாட்கள்; சூழலை உணராத அக்ரஸன்!' - இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா எப்படி தோற்றது?

இது ப்ளாட் பிட்ச். இங்கிலாந்து அடித்திருப்பது சுமாரான ஸ்கோர். இந்தியா இந்த டார்கெட்டை எளிதில் சேஸ் செய்யும், செய்தே ஆக வேண்டும்... ஏக ஸ்ருதியில் வர்ணனையாளர்கள் அத்தனை பேரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால... மேலும் பார்க்க

Varun Chakaravarthy : 'முடிஞ்சா தொட்டுப் பார்!' - மீண்டும் ஒரு 5 விக்கெட் ஹால்; அசத்தும் வருண்

2021 உலகக்கோப்பையில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தபோது அவரின் மிஸ்டரி பௌலிங்கின் மூலம் எதையோ செய்யப்போகிறார் எனத் தோன்றியது. ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. ஒரு சில போட்டிகளில் ஆ... மேலும் பார்க்க

Mitchell Owen: 'அன்று ஹோபர்ட் ரசிகன்; இன்று அதே அணியின் சாம்பியன்' - Big Bash லீக்-ஐ அதிர வைத்த ஓவன்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான லீகான பிக்பேஸ் லீக் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னி தண்டர்ஸ் அணிக்கும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி சுலபமாக வென்று சாம்பியனா... மேலும் பார்க்க