INDvsENG: `கடைசி நேரத்தில் பிளெயிங் லெவனில் இடம்பெறாத Kohli; 2 பேர் அறிமுகம்' -ரோஹித்தின் காரணமென்ன?
இன்னும் இரண்டு வாரத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, இங்கிலாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நாக்பூரில் இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதைத்தொடர்ந்து, கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்த பிளெயிங் லெவனில் ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் முதல்முறையாக இடம்பெற்றனர். அதேசமயம், விராட் கோலியின் பெயர் இடம்பெறவில்லை. மேலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் போட்டியில் ஷமி களமிறங்கியிருக்கிறார்.
பிளெயிங் லெவன் அறிவித்த பிறகு பேசிய ரோஹித், ``முதலில் ஆக்ரோஷமாகப் பந்துவீசி பின்னர் நன்றாகச் செயல்பட வேண்டும். சிறுது நேரம் ஒய்வு கிடைத்ததில் மகிழ்ச்சி. இது ஒரு புதிய தொடக்கம். சிறப்பாகச் செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு. கிடைக்கின்ற வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜெஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் இன்று அறிமுகமாகிறார்கள். துரதிர்ஷ்டவசமாகக் கோலி விளையாடவில்லை. நேற்றிரவு அவருக்கு முழங்கால் வலி ஏற்பட்டது." என்று கூறினார்.
இந்தியா பிளெயிங் லெவன்: ரோஹித், ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.