செய்திகள் :

Israel: 'இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்' - ஏன்?

post image

இந்தியாவின் எல்லைகளைத் தவறாக காட்டியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல்கள் எழுந்துள்ளன. ஈரானின் அணு ஆயுத மையம் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நாடந்திய தாக்குதலில், அந்த நாட்டின் தலைமை ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார்.

ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் தலைநகர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

Range of iran missiles
Range of iran missiles

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் எப்போது வேண்டுமானாலும் முழுமையான போராக வெடிக்கும் அபாயம் இருக்கிறது.

Israel செய்தது என்ன?

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “ஈரான் உலகுக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. இஸ்ரேல் அவர்களின் இறுதி இலக்கு அல்ல, ஒரு தொடக்கம்தான். இப்போது செயல்படுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை.” என ஒரு ட்வீட் செய்திருந்தது.

அதில் இணைக்கப்பட்ட புகைப்படத்தில் ஈரான் மூலம் ஏவுகணை ஆபத்து உள்ள நாடுகளை குறித்திருந்தது. ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளை ஈரான் ஏவுகணைகள் தாக்க முடியும் என்பதே இஸ்ரேல் ராணுவம் கடத்த முயன்ற செய்தி.

ஆனால் அந்த வரைபடத்தில் இந்திய எல்லைகள் தவறாக வரையறுக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பின்னர் அதில், “இந்த பதிவு பிராந்தியத்தைப் பற்றிய சித்திரம். இந்த வரைபடம் எல்லைகளை சரியாக வரையறுக்கத் தவறிவிட்டது. இந்த புகைப்படத்தால் யாராவது புண்பட்டிருந்தால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என கமெண்ட் செய்தது இஸ்ரேல் ராணுவம்.

எனினும் இந்திய ஆதரவாளர்கள் பலர், இஸ்ரேல் ராணுவம் பதிவை நீக்கிவிட்டு சரிசெய்து பதிவிட வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

காஷ்மீரில் சில பகுதிகளை பல ஆண்டுகளாக பாகிஸ்தான் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூழலும், இந்தியா அவற்றை தமது நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகளாகவே கருதுகிறது.

சமீப காலமாக இந்தியா - இஸ்ரேல் இடையே நட்புறவு பேணப்படும் சூழலில், இந்த விவகாரம் தேவையற்ற சர்ச்சை என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

பாமக: வடிவேல் இராவணன் நீக்கம்; பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளர்- ராமதாஸ் உத்தரவு

பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். அன்புமணி, ராமதாஸ்விழ... மேலும் பார்க்க

தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்; 'அமெரிக்கா உங்களைத் தாக்கும்' - ஈரானை மிரட்டும் ட்ரம்ப்! - ஏன்?

ஜூன் 12 நள்ளிரவு ஈரானை தாக்கியது இஸ்ரேல். 'இதில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் இல்லை' என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த நாளே அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க... மேலும் பார்க்க

”திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு; தமிழில் நடத்தாவிட்டால்..” – சீமான்

திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு திருவிழாவை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்... மேலும் பார்க்க

Israel - Iran Conflict: ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) எனும் ராணுவ நட... மேலும் பார்க்க

'பேரம் பேசத் தெரியலனு சொல்றாங்க; எப்போ என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்..'-திருமாவளவன் ஓப்பன் டாக்

திருச்சியில் நேற்று (ஜூன் 14) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பேசிய திருமாவளவன், "திருச்சியில் பேரணி நடத்துவதற்கு முதலி... மேலும் பார்க்க

Israel - Iran Conflict: பின்னணியில் America? | Ahmedabad Plane CrashTRUMP |Imperfect Show 14.6.2025

* இஸ்ரேலின் தாக்குதல் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல - பெஞ்சமின் நெதன்யாகு - வருண்* இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 78 பேர் உயிரிழப்பு - சிபி* உலக நாடுகளின் தலைவர்களுடன் நெதயான்கு பேச்சு? - சிபி* Israel V... மேலும் பார்க்க