செய்திகள் :

JEE Advanced தேர்வு எழுதிய ChatGPT 3.0 ; கடினமான தேர்வில் அதன் ஸ்கோர் என்ன தெரியுமா?

post image

JEE Advanced தேர்வு - இதை நம்ம ChatGPT எழுதினால் எப்படி இருக்கும்?

அப்படி என்ன ஜே.இ.இ தேர்வி ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தத் தேர்வு உலக அளவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்று. இது இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIT) சேர்வதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வாகும்.

மேலே கேட்ட கேள்வியை நடத்திக் காட்டியிருக்கிறார் IIT கரக்பூரை சேர்ந்த அனுஷ்கா ஆஷ்வி என்ற மாணவி. சாட் ஜி.பி.டி-யிடம் ஜே.இ.இ அட்வான்ஸ்டின் மாதிரி வினாத் தாளைக் கொடுத்து பதில் கேட்டிருக்கிறார். இதற்கு அது வாங்கிய ரிசல்ட் தான் அதிர்ச்சி மற்றும் ஆச்சரிய ரகம்.

தேர்வு
தேர்வு

360 மதிப்பெண்களுக்கு 327

ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் பேர் ஜே.இ.இ முதன்மை தேர்வுகளை எழுதுகின்றனர். இதில் 2,50,000 பேர் மட்டுமே ஜே.இ.இ அட்வான்ஸ்டுக்கு தகுதி பெறுகிறார்கள். இந்தத் தேர்வில் சுமார் 17,000 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று ஐ.ஐ.டியில் இடம் பிடிக்கின்றனர். இது அந்தத் தேர்வின் கடின அளவிற்கான எடுத்துக்காட்டு.

இப்படிப்பட்ட தேர்வின் வினாத்தாளிற்கு பதிலளித்து ChatGPT 3.O அசால்டாக 360 மதிப்பெண்களுக்கு 327 மதிப்பெண்கள் ஸ்கோர் செய்துள்ளது.

சில கேள்விகளுக்கு பதில் அளிக்க நிமிடங்கள் வரை ஆகியுள்ளது. சில கேள்விகளுக்கு தவறான பதில் அளித்திருக்கிறது. வேதியியல் மற்றும் கணிதம் இரண்டிலும் 60 என்று ஃபுல் மார்க்கை எடுத்துள்ளது. ஆனால், இயற்பியலில் மட்டும் சிறிது சறுக்கி, சிறிய சிறிய பிழைகளைச் செய்துள்ளது.

'சாட் ஜி.பி.டி ஸ்கோர் செய்வதில் என்ன அதிசயம் இருக்கிறது... அது இணையத்தில் இருந்து பதில்களை எடுத்திருக்கும்?' என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இங்கே தான் ட்விஸ்ட். அனுஷ்கா ஆஷ்வி ஜே.இ.இ தேர்வுகளுக்கு என்ன விதிமுறைகள் விதிக்கப்படுமோ, அதே விதிமுறைகளை சாட் ஜி.பி.டி-ற்கும் விதித்துள்ளார். அதாவது JEE தேர்வாளர் போல தேர்வை எதிர்கொள்ளவும், இணையத் தேடல்கள், குறியீட்டு கருவிகள், குறிப்புகள் என எதனையும் பயன்படுத்த கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். ஒவ்வொரு கேள்வியையும் சுயாதீனமாகத் தீர்க்க வேண்டும் என்பது முக்கிய கண்டிஷன்.

இந்தக் கட்டளைகளை எல்லாம் பின்பற்றி தேர்வு எழுதி தான் சாட் ஜி.பி.டி 327/360 மதிப்பெண்கள் எடுத்து உள்ளது. இதே மதிப்பெண்ணை ஜே.இ.இ தேர்வில் ஒரு மாணவர் எடுத்தால் அவருக்கு நான்காவது ரேங்க் கிடைக்குமாம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

குஜராத்: புல்லட் மீது தீராத காதல்... விபத்தில் இறந்த வாலிபரின் உடலுடன் புல்லட்டும் சேர்த்து அடக்கம்

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள உத்தர்சந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் பார்மர்(18). இவருக்கு ராயல் எல்பீல்டு புல்லட் பைக் என்றால் மிகவும் பிடிக்கும்.எங்குச் சென்றாலும் அவர் தனது புல்லட்... மேலும் பார்க்க

நடுவானில் மோசமான உடல்நிலை; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்கு தொடர்ந்த மருத்துவர் - என்ன நடந்தது?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர், விமானத்தில் பயணித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளார்.தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின் படி, நியூயா... மேலும் பார்க்க

டெல்லி: மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக அலறிய பெண்களின் வீடியோ வைரல்; DMRC-யின் விளக்கம் என்ன?

டெல்லி மெட்ரோவின் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் அதனை கண்டு பயணிகள் அலறியடித்து சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.மெட்ரோ ரயில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தா... மேலும் பார்க்க

2006-ல் நிலத்தை விற்ற தந்தை; நில உரிமையாளரிடம் 19 ஆண்டுபின் இழப்பீடு கோரும் மகள் - என்ன நடந்தது?

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 2006 ஆம் ஆண்டு தனது நிலத்தை ஒருவருக்கு பெற்றுள்ளார். விற்றவரின் மகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கு ம... மேலும் பார்க்க

மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்க... மேலும் பார்க்க

2025 -1941: ஒரே நாள்காட்டியை கொண்டிருக்கும் ஆண்டுகள்- உலகப்போர் நடந்த ஆண்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

2025 ஆம் ஆண்டின் நாள்காட்டி 1941 ஆம் ஆண்டின் நாள்காட்டியோடு அப்படியே ஒத்து இருக்கிறது. அதாவது இரண்டு ஆண்டுகளிலும் தேதிகள், கிழமைகள் ஒன்றாகவே வருகின்றன. 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி 1941 ஆம் ஆண்டு போலவே உ... மேலும் பார்க்க