செய்திகள் :

Jio - Hotstar : டொமைனை வைத்துக்கொண்டு ரூ.1 கோடி கேட்கும் டெவலபர் - என்ன செய்யப்போகிறது ரிலையன்ஸ்?

post image

டெல்லியைச் சேர்ந்த டெவலபர் ஒருவர் Jiohotstar.com என்ற டொமைனை வாங்கி வைத்துள்ளார். ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் தளங்கள் இணைவது உறுதியாகியிருக்கும் நிலையில், இவர் இந்த டொமைனை அளிப்பதற்கு சில நிபந்தனைகளை வைத்துள்ளார்.

பொதுவாக பெரிய நிறுவனங்கள் தொடங்கப்படும்போது அதற்கான டொமைன் யாரிடம் இருந்தாலும், எவ்வளவு விலை சொன்னாலும் வாங்கிக்கொள்வர்.

அப்படி ஜியோ ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கி வைத்துள்ள நபர், அந்த நிறுவனத்தினருக்கு தான் வைத்திருக்கும் டொமைன் வேண்டுமென்றால், தன்னுடைய படிப்புச் செலவுக்கு பணம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாத அந்த நபர், ரிலையன்ஸ் நிறுவனத்தினருக்கு எழுதிய கடிதத்தில், "ஜியோ - ஹாட்ஸ்டார் தளங்கள் இணைகிறதென்றால் Jiohotstar.com என்று பெயர் மாற்றப்படும் என நினைத்தேன். ஒருவேளை இந்த பெயருக்கு மாறினால் என்னுடைய கேம்பிரிட்ஜ் கனவை நனவாக்கிக்கொள்ள முடியும் என்பதால், இந்த டொமைனை வாங்கினேன்". என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டெவலப்பர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் Accelerate program -ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். "என்னால் ஐஐடி-க்குள் நுழையமுடியவில்லை. இரண்டாம் நிலை கல்லூரியில் படித்த எனக்கு இந்த திட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம், இது எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜியோ - ஹாட்ஸ்டார் தளங்கள் இணைவு ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. ஆனால் புதிய டொமைன் உருவாக்கப்படுமா என்பது குறித்து தகவல்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

கேம்பிரிட்ஜில் தொழில்முனைவோருக்கான பட்டபடிப்பை படிக்க விரும்பும் அந்த டெவலபர், அது விலை உயர்வானது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உலக தரம்வாய்ந்த பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ படிக்க ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முகம் தெரியாத அந்த டெவலபர், ரிலையன்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களுக்கு இது சிறிய தொகை என்றும் தனக்கு வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் தளம் இவரது கோரிக்கையை மறுத்திருப்பதாகவும் சட்ட ரீதியாக டொமைனைப் பெற முயற்சிகள் மேற்கொள்வதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

`அஜித் பவாருக்கே கடிகாரம் சின்னம்'- கைவிட்ட சுப்ரீம் கோர்ட்... சரத் பவாருக்குப் பின்னடைவு!

மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவரது சகோதரர் மகன் அஜித் பவார் கடந்த ஆண்டு இரண்டாக உடைத்தார். அவர் இப்போது பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்து துணை முதல... மேலும் பார்க்க

திருவாரூர்: மனுநீதிச் சோழன் நினைவு கல்தேர்; தொய்வுடன் நடைபெறும் திருப்பணி - மக்கள் வேதனை

திருவாரூர் மாவட்டம், தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் விட்டவாசல் பகுதியில் அமைந்துள்ளது மனுநீதிச் சோழன் நினைவு கல்தேர்.மனுநீதிச் சோழன் என்பவர் திருவாரூர் மண்ணை ஆண்ட சோழ மன்னன் ஆவார். இன்னும் நீதி தவறாமை... மேலும் பார்க்க

Britney Spears: "நான் வாழ்வில் செய்த சிறந்த காரியம்.." - தன்னைத்தானே திருமணம் செய்த பாடகி ஸ்பியர்ஸ்

அமெரிக்காவின் பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். சிறுவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிய ஸ்பியர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையில் ஈரானிய-அமெரிக்க... மேலும் பார்க்க

Stammering Day: `பேச்சுக்கு எல்லை ஏது?' – ரேடியோ மிர்ச்சியின் ஒரு துணிச்சலான செயல்

புதுமையான யோசனைகளுக்கு பெயர் பெற்ற ரேடியோ மிர்ச்சி, அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மற்றொரு தைரியமான முயற்சியுடன் மீண்டும் வந்துள்ளது.இந்த நேரத்தில், அவர்கள் ரேடியோ ஜாக்கிகளாக (RJs) பேச்சு குறை... மேலும் பார்க்க

சல்மான்கானை குறிவைக்கும் கேங் - பிளாக்பக் மான்களுக்கும் பிஷ்னோய் இனத்துக்குமான 5 நூற்றாண்டு தொடர்பு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் 1998-ம் ஆண்டு `ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற போது ஜெய்ப்பூர் அருகே இரண்டு அபூர்வ வகை பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு... மேலும் பார்க்க

Bishnoi : சல்`மான்' சர்ச்சையால் பேசுபொருளான `வன' பாதுகாவலர்கள்! - யார் இந்த பிஷ்னோய் இன மக்கள்?

லாரன்ஸ் பிஷ்னோய் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு மாஃபியாவாக வளர்ந்து நிற்கிறார். இந்த அளவுக்கு அறியப்படுவதற்கு காரணம் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததுதான். சல்மான... மேலும் பார்க்க