செய்திகள் :

Kajol: `அதையே மீண்டும் ஏன் இந்தியில் பேச வேண்டும்?'- மராத்தி விழாவில் நடிகை கஜோல்

post image

மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள்-2025 விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை கஜோல் கலந்துகொண்டார். இந்திய சினிமாவுக்கு நடிகை கஜோல் செய்த பங்களிப்புக்காக மதிப்புமிக்க ராஜ் கபூர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றப் பிறகு நடிகை கஜோல் மராத்தி மொழியில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும், ஆங்கிலம் கலந்த மராத்தி மொழியில் பேசினார். செய்தியாளர் சந்திப்புக்கு இடையே செய்தியாளர் ஒருவர், இந்தியில் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது நடிகை கஜோலின் முகம் உடனடியாக மாறியது. மேலும், ``நான் பேசியதை மீண்டும் இந்தியில் பேசவேண்டுமா? ஏன்? நான் பேசுவது யாருக்கெல்லாம் புரியுமோ அவர்கள் புரிந்துகொள்ளட்டும்." என இந்தியில் பதிலளித்துவிட்டு, மீண்டும் ஆங்கிலம் கலந்த மராத்தி மொழியில் பேசினார். அவர் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் அவர் கோபப்பட்ட பகுதிமட்டும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்தி மொழிப் பேசும் மாநிலத்தவர்கள் நடிகை கஜோலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

``அவர் நடிப்பதற்கு பாலிவுட் இந்தி படங்கள் வேண்டும். சம்பாதிக்க இந்தி மொழி வேண்டும். ஆனால் அவர் இந்தி மொழியில் பேசமாட்டாரா? அவர் இனி மராத்தி மொழி படங்களில் மட்டும் வேலை செய்யட்டும். அவர் இந்தியை மதிக்கவில்லை என்றால், ஏன் படத்தை இந்தியில் மொழிபெயர்க்க வேண்டும், " எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

நடிகை கஜோல்
நடிகை கஜோல்

ஆனால், இதுகுறித்து சற்றும் கண்டுகொள்ளாத நடிகை கஜோல், அவர் விருது விழாவுக்கு தன் அம்மாவுடன் சென்ற வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ``என் அம்மா ஒரு காலத்தில் நடந்த அதே மேடையில், என் பிறந்தநாளில் நானும் நடப்பது பிரபஞ்சம் எனக்கு நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை நினைவூட்டுவது போல உணர்கிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

SRK: "ஷாருக்கான் என் காலேஜ் சீனியர்; ஆனாலும், அவருடைய அம்மாவாக நடித்தேன்" - நடிகை ஷீபா சத்தா

'பதாய் ஹோ', 'பதாய் டு' உட்படப் பல பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை ஷீபா சத்தா.இதைத் தாண்டி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் அம்மா கதாபாத்திரங்களாகவும் இவர் நடித்திருக்கிறார்.இவர் 'ரயீஸ்', 'ஜீரோ' ஆகி... மேலும் பார்க்க

மீண்டும் சீரியல்; வைரலாகும் சம்பளம் விவரம்; "அதிக சம்பளத்திற்குக் காரணம் இருக்கு" - ஸ்மிருதி இரானி

முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார். அந்தத் தொடருக்காக அவர் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.டி.வி... மேலும் பார்க்க

Deepika Padukone: வைரலான விளம்பர ரீல்; ஹர்திக் பாண்டியாவை முந்திய தீபிகா படுகோன்!

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஏராளம். ஆனால், சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் மனங்களில் தனி இடம் பிடிக்கின்றன. அந்த வகையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகி... மேலும் பார்க்க

``என்னுடைய கிரஷ்; அவருக்கு லெட்டார்லாம் போட்டேன்" - பாலிவுட் நடிகர் குறித்து எம்.பி மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் என்றால், தன்னுடைய ஆக்ரோஷமான பேச்சால் பெரும்பாலான எம்.பி-களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிவிடுவார். அதே நேரம் சமூக ஊடகங்களிலும், தனிப்... மேலும் பார்க்க

மாதம் ரூ.24.5 லட்சம் வாடகை; ஆமிர் கானும் குடியேறும் வாடகை வீடு - என்ன ஸ்பெஷல்?

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மும்பை இல்லம் இப்போது கூடுதல் மாடிகளுடன் நீட்டித்து புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ஷாருக்கான் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இதேபோன்று ந... மேலும் பார்க்க

Raanjhanaa Re-release: "படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது; என் ஆட்சேபனையை மீறி.!" - தனுஷ் காட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், கடந்த 2013-ல் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் `ராஞ்சனா' என்ற திரைப்படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரிலும் ரிலீஸானது.ஏ.ஆர... மேலும் பார்க்க