செய்திகள் :

KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

post image

Qlமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார் முன்னணி நடிகர் தனுஷ்.

ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன் (Kalam: Missile Man of India) எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த திரைப்படம் குழந்தைப் பருவம் முதல் அப்துல் கலாமின் பயணத்தைக் கூறும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இயக்குநர் ஓம் ராவத், "ராமேஸ்வரம் முதல் ராஷ்ட்ரபதிபவன் வரை. ஒரு லெஜண்டின் பயணம் தொடங்குகிறது.

இந்தியாவின் ஏவுகணை நாயகன் வெள்ளித்திரைக்கு வருகிறார்.

பெரிதாக கனவு காணுங்கள்... உயர்ந்த இடத்துக்கு செல்லுங்கள்..." எனப் பகிர்ந்துள்ளார்.

இந்த திரைப்படம் அபிஷேக் அகர்வாலின், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் முன்னதாக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தைத் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் சாதாரண பின்னணியில் பிறந்து கல்வியின் மூலம் நாட்டின் உயர்ந்த நிலைக்குச் சென்றவர். இந்தியாவின் முதல் அணு ஆயுத தயாரிப்பில் முக்கிய பங்காற்றியதுடன், நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்துள்ளார்.

அப்துல் கலாம்

அப்துல் கலாமாக நடிப்பது தனுஷின் சினிமா வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், "நான் நமது இன்ஸ்பிரேஷனலான தாராள மனப்பான்மைகொண்ட தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயாவாக நடிப்பதில் மிகுந்த பாக்கியவானாகவும் பணிவாகவும் உணர்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் இட்லி கடை மற்றும் குபேரன் திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு ஐசரி கனேஷ் இயக்கத்தில் மாரி செல்வராஜுடன் மீண்டும் இணையும் திரைப்படம் அறிவிக்கப்பட்டது.

Ananya Pandey: `கோழி கால்கள், தீக்குச்சி உடல் என கேலி செய்தார்கள்'- ஏளனங்கள் குறித்து அனன்யா பாண்டே

பாலிவுட்டில் 2019ம் ஆண்டு வெளியான `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனன்யா பாண்டே, அவரது தோற்றத்துக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இன்று, முன்னணி நடிகையாக வளர்ந்த... மேலும் பார்க்க

Marriage Dance: கணவர் அபிஷேக் பச்சன், மகளுடன் சேர்ந்து வைரல் நடனமாடிய ஐஸ்வர்யா ராய்

மும்பையில் நடந்த திருமணம் ஒன்றில் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய் இருவரும் தங்கள் மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்டனர். திருமணத்தில் பாடகர் ராகுல் வைத்யா இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்பாடல்களை விரும்பிக்... மேலும் பார்க்க

சிதாரே ஜமீன் பர் படப் புறக்கணிப்பு விவகாரம்; தயாரிப்பு நிறுவன ப்ரொபைல் படத்தை மாற்றிய ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.இதற்கான வேலையில் ஆமீர் கான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மானும் ஹான்ஸிம்மரும் ராமாயணம் கதைக்கு இசையமைக்கிறார்களா? - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 'ராமாயண்' என தலைப்பு வைத்து சமீபத்தி... மேலும் பார்க்க

Met Gala: ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்..

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த `மெட் காலா' என்ற நிகழ்ச்சியில் பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அங்கு நடந்த பேஷன் ஷோவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக கலந்து கொண்... மேலும் பார்க்க

`தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து ராணுவ வீரர்கள் செயல்பட்டார்கள்' - பாராட்டி நெகிழும் ஆலியா பட்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான்... மேலும் பார்க்க