செய்திகள் :

Kanguva : `சூர்யா சார் 4 மணிக்கு எழுந்து மேக்கப் போட்டு, 6 மணிக்கு ஷூட்டுக்கு ரெடியாகிடுவார்'- சிவா

post image
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இதையொட்டி இன்று (நவம்பர் 7) இப்படத்தின் '3டி' ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்தும் சூர்யா குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் சிவா. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், "'கங்குவா' திரைப்படத்தின் கதையை எழுதிக் கொண்டிருக்கும்போதே இது மிகப்பெரிய திரைப்படம் என்று தெரிந்துவிட்டது. இந்த மிகப்பெரிய திரைப்படத்தை எடுத்துவிட முடியுமா என்பதுதான் எனக்கிருந்த பெரிய சவாலாக இருந்தது. 'உன்னால்' முடியும் சிவா என்று என் மீது எல்லோரும் நம்பிக்கை வைத்தனர். படக்குழுவினர் எல்லோரும் சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அவர்களின் அந்த நம்பிக்கையில் உருவனதுதான் இந்தப் படம்.

கங்குவா

நான் எங்கு போனாலும் சூர்யா சார் ரசிகர்கள் என்கிட்ட கேட்கிற ஒரே விஷயம், 'சார் எங்க அண்ணனுக்கு ஒரு மாஸான, நல்ல படம் கொடுங்க சார்'னுதான் கேட்பாங்க. அவங்களுக்கெல்லாம் நான் ஒன்னு சொல்லிக்கிறேன் 'உங்க அண்ணன், எங்க சூர்யா சாருக்கு இது மாபெரும் வெற்றிப் படமாக இருக்கும்'. ரசிகர்களோட அளவற்ற அன்புக்கு 100 % தகுதியான மனிதர் சூர்யா சார். இந்த படத்துல 2,3 வருஷமா சூர்யா சார் கூட பயணிச்சிருக்கிறேன். காலையில 4 மணிக்கு எழுந்து, மேக்கப் எல்லாம் போட்டு, 6 மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு ரெடியாக வந்து நிற்பார்.

இதுவரைக்கும் ஒருமுறைகூட 'இது வேணுமா, இது தேவையா, இத பண்ண முடியுமா' என்று என்கிட்ட கேட்டதே இல்லை. தண்ணிக்குள்ள இருக்கச் சொன்னேன் இருந்தார், மலை மேல ஏறச் சொன்னேன் ஏறினார். மரத்தில் ஏறச் சொன்னேன் ஏறினார். நான் சொல்வதை தயக்கமின்றி செய்தார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகந்த சவாலுடன் 'கங்குவா' கதாபாத்திரத்திற்குத் தயாரானார். ஆகச் சிறந்த அர்ப்பணிப்பையும், உழைப்பையும் கொடுத்திருக்கிறார் சூர்யா சார்.

இயக்குநர் சிவா

ஒவ்வொரு காட்சிக்குப் பின்னாடியும் பெரிய எமோஷன் இருக்கு, பெரிய ஆக்‌ஷன் இருக்கு. படக்குழுவினர் ஒவ்வொருத்தரும் இப்படத்தை நம்ம படம் என்று நினைத்து கடுமையாக உழைத்தார்கள். அதுதான் இப்படம் மிகப்பெரிய படமாக உருவாவதற்குக் காரணம்." என்று பேசியிருக்கிறார்.

Surya: தமிழில் சொதப்பிய அஞ்சான் இந்தி வெர்ஷனில் ஹிட் ஆனது எப்படி? - சீக்ரட் சொன்ன யூடியூப் சேனல்!

கோல்ட் மின்ஸ் தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் யூடியூப் சேனலாகும். நார்த் இந்தியன் நண்பர்களுக்கு விஜய், அஜித், சூர்யா என நம் ஸ்டார்கள் அறிமுகமாவது இந்த யூடியூ... மேலும் பார்க்க

Inbox 2.0 EP 5: "2X ல வச்சு இந்த வீடியோவை பாருங்க மக்களே..!" | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 5 இப்போது வெளிவந்துள்ளது.முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

Aurora: தமிழர்கள் மத்தியில் பிரபலமான அரோரா தியேட்டருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்; பின்னணி என்ன?

மும்பை தமிழர்கள் மத்தியில் அரோரா தியேட்டர் என்றால் மிகவும் பிரபலம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரோரா தியேட்டரில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். தமிழகத்தில் எந்த படம் வெளியானாலும் அப்படம் அர... மேலும் பார்க்க

Ramya Pandiyan: கங்கைக் கரையில் காதலனைக் கரம் பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்... குவியும் வாழ்த்துகள்!

இயக்குநர் ராஜுமுருகனின் ஜோக்கர், மலையாள நடிகர் மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். திரைப்படங்கள் மட்டுமல... மேலும் பார்க்க

Amaran : `காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு...' - அமரன் குறித்து கோபி நயினார் விமர்சனம்!

அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவானது அமரன் திரைப்படம். இந்திய ராணுவத்தி... மேலும் பார்க்க

Dhanush 55 : அமரன் இயக்குநர் இயக்கத்தில் தனுஷின் 55-வது திரைப்படம்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு `அமரன்' திரைப்படம் வெளியாகியிருந்தது.சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக களமிறங்கி அசத்தியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல்... மேலும் பார்க்க