செய்திகள் :

"King Cobra-வின் உண்மையான நீளம் என்ன?" - வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரல்!

post image

ஒரு இளைஞர் தனது வெறும் கைகளால் ராட்சத கிங் கோப்ரா பாம்பைத் தைரியமாகப் பிடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த 11 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு இளைஞர் ராட்சத கிங் கோப்ராவை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து, "கிங் கோப்ராவின் உண்மையான நீளம் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தியாவில் இது எங்குக் காணப்படுகிறது? அதைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?" என பர்வீன் கஸ்வான் வீடியோவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

தலையை உயர்த்திக் காண்பிக்கும் ராஜ நாகம்
தலையை உயர்த்திக் காண்பிக்கும் ராஜ நாகம்

கிங் கோப்ரா எங்குக் காணப்படும்?

உலகின் மிக நீளமான விஷப் பாம்பு இனங்களில் ஒன்று இந்த கிங் கோப்ரா பாம்புகளாகும். இது 18 அடி (5.5 மீட்டர்) வரை வளரக்கூடியது.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பாம்புகள், பொதுவாக அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன.

குறிப்பாக இந்தியாவில், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இவை அதிகம் காணப்படுகின்றன.

இவற்றின் கொடிய விஷமும், பயமுறுத்தும் தோற்றமும் இருந்தாலும், கிங் கோப்ராக்கள் சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சமீபத்தில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பேப்பாறா அருகே பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், ஒரு பெரிய கிங் கோப்ராவை ஒரு நீரோடையிலிருந்து துணிச்சலுடன் மீட்கும் வீடியோ வைரலானது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Tiger Cub: எரிவாயு தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட 6 மாத புலிக் குட்டி; மீட்கப்பட்ட பின்னணி என்ன?

கர்நாடக மாநிலம் பிடகளு கிராமத்தில் நவீன் என்பவருக்குச் சொந்தமான உயிரி எரிவாயு நிலையம் இருக்கிறது. அந்த வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் எரிவாயு தொட்டிக்குள்ளிருந்து நேற்று திடீரென வித்தியாசமா... மேலும் பார்க்க

Kaziranga: தாயை பிரிந்து சாலையில் பரிதவித்த குட்டி யானை; கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை செய்த மேஜிக்!

பாட்டி யானை என்றழைக்கப்படும் மூத்த பெண் யானைகள் மூலமே ஒவ்வொரு யானை குடும்பமும் வழிநடத்தப்படுவதுடன், மத யானைகள் நீங்கலாக குட்டிகளுடன் மொத்த குடும்பத்தையும் பாட்டி யானைகளே வலசை அழைத்துச் சென்று பாதுகாப்... மேலும் பார்க்க

Birds: அழிவின் விளிம்பில் 500 பறவை இனங்கள்; ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவுகள்; காரணம் என்ன?

காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அடுத்த நூற்றாண்டுக்குள் 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழக (Universi... மேலும் பார்க்க

மலப்புரம்: 53 நாள் தேடல், கூண்டுக்குள் சிக்கிய ஆக்ரோஷ புலி; சுட்டுக்கொல்ல போராடும் மக்கள் ஏன்?

கேரள மாநிலத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளால் வனவிலங்குகளின் வாழிட... மேலும் பார்க்க

கடல் போல் காட்சியளிக்கும் பவானி கூடுதுறை; காவிரி - பவானி சங்கமத்தின் அழகிய காட்சி! | Photo Album

காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை ... மேலும் பார்க்க

Hogenakkal: ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி! - Drone visuals

ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிகள்ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓக... மேலும் பார்க்க