செய்திகள் :

Tiger Cub: எரிவாயு தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட 6 மாத புலிக் குட்டி; மீட்கப்பட்ட பின்னணி என்ன?

post image

கர்நாடக மாநிலம் பிடகளு கிராமத்தில் நவீன் என்பவருக்குச் சொந்தமான உயிரி எரிவாயு நிலையம் இருக்கிறது. அந்த வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் எரிவாயு தொட்டிக்குள்ளிருந்து நேற்று திடீரென வித்தியாசமான உறுமல் சத்தம் கேட்டிருக்கிறது.

அருகில் சென்ற நவீன், தொட்டிக்குள் எட்டிப் பார்த்திருக்கிறார். புலிக் குட்டி ஒன்று உள்ளே விழுந்து மேலே வர முடியாமல் தவிப்பதைக் கண்டிருக்கிறார். உடனடியாக வனத்துறை தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதிக்குக் குழுவாகச் சென்ற வனத்துறையினர், சில மணி நேரங்களில் அந்தப் புலிக் குட்டியைப் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.

வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மைசூரு அருகில் உள்ள கூர்கல்லி வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

புலி குட்டி
புலி குட்டி

இது குறித்து தெரிவித்துள்ள உதவி வனப்பாதுகாவலர் சுமத்ரா, "கர்நாடக மாநிலம், எச்.டி. கோட்டே வனப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய திறந்தவெளி பயோ கேஸ் தொட்டிக்குள் புலிக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிறந்து 6 மாதமே ஆன இந்த ஆண் புலிக் குட்டி வழி தவறி ஊருக்குள் வந்திருக்கலாம் அல்லது தாய் புலியை இழந்திருக்கலாம். அந்தப் புலிக் குட்டி மீட்கப்பட்ட பகுதியில் இரண்டு செம்மறியாடுகள் கடிபட்டு இறந்து கிடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

புலிக் குட்டியின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்து மீண்டும் வனத்திற்குள் விடுவதா அல்லது மறுவாழ்வு மையத்தில் வைத்துப் பராமரிப்பதா போன்ற முடிவுகள் எடுக்கப்படும்" என்றார் .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"King Cobra-வின் உண்மையான நீளம் என்ன?" - வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரல்!

ஒரு இளைஞர் தனது வெறும் கைகளால் ராட்சத கிங் கோப்ரா பாம்பைத் தைரியமாகப் பிடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பக... மேலும் பார்க்க

Kaziranga: தாயை பிரிந்து சாலையில் பரிதவித்த குட்டி யானை; கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை செய்த மேஜிக்!

பாட்டி யானை என்றழைக்கப்படும் மூத்த பெண் யானைகள் மூலமே ஒவ்வொரு யானை குடும்பமும் வழிநடத்தப்படுவதுடன், மத யானைகள் நீங்கலாக குட்டிகளுடன் மொத்த குடும்பத்தையும் பாட்டி யானைகளே வலசை அழைத்துச் சென்று பாதுகாப்... மேலும் பார்க்க

Birds: அழிவின் விளிம்பில் 500 பறவை இனங்கள்; ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவுகள்; காரணம் என்ன?

காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அடுத்த நூற்றாண்டுக்குள் 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழக (Universi... மேலும் பார்க்க

மலப்புரம்: 53 நாள் தேடல், கூண்டுக்குள் சிக்கிய ஆக்ரோஷ புலி; சுட்டுக்கொல்ல போராடும் மக்கள் ஏன்?

கேரள மாநிலத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளால் வனவிலங்குகளின் வாழிட... மேலும் பார்க்க

கடல் போல் காட்சியளிக்கும் பவானி கூடுதுறை; காவிரி - பவானி சங்கமத்தின் அழகிய காட்சி! | Photo Album

காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை ... மேலும் பார்க்க

Hogenakkal: ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி! - Drone visuals

ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிகள்ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓக... மேலும் பார்க்க