செய்திகள் :

Kubera: `விஜய் தேவரகொண்டாவிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்வேன்' -வைரலாகும் ராஷ்மிகாவின் வீடியோ

post image

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். 

குபேரா
குபேரா

மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், எந்தெந்த பிரபலங்களிடம் இருந்து எந்த தகுதியை நீங்கள் எடுத்துக்கொள்ள ஆசைப்படுவீர்கள்? என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். முதலில், நாகர்ஜுனாவிடம் இருந்து என்ன தகுதியை எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராஷ்மிகா “நாகர்ஜுனாவின் வசீகரம், அவரது ஆராவை எடுத்துக்கொள்வேன்”என்றிருக்கிறார்.

பின்னர், தனுஷிடம் இருந்து என்ன எடுத்துக்கொள்வீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “ அவர் என்ன வேண்டுமானாலும் செய்யும் திறமை படைத்தவர். பாடுவார், ஆடுவார், இசையமைப்பார், அனைத்தும் செய்வார்” என்றிருக்கிறார். 

அல்லு அர்ஜுனிடம் இருந்து என்ன தகுதி வேண்டும்? என்று கேட்கப்பட்டபோது, “அவரின் ஸ்வாக்கை எடுத்துக்கொள்வேன்” என்று கூறியிருக்கிறார். 

விஜய் தேவரகொண்டா

பின்னர், விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து என்ன எடுத்துக்கொள்வீர்கள்? என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ராஷ்மிகா மந்தனா, அவரிடம் உள்ள அனைத்து தகுதிகளையும் எடுத்துக்கொள்வேன்” என்று வெட்கப்பட்டுக்கொண்டே பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் தேவரகொண்டாவும், நடிகை ரஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இருவரும் தற்போதுவரை அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"தெலுங்கில் நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது" - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி

தெலங்கானா அரசின் திரைப்பட விருது விழாவில் 4ம் ஆண்டாக விருதை வென்றிருக்கிறார் துல்கர் சல்மான்.தெலுங்கில் 'மகாநாட்டி', 'சீதா ராமம்' மற்றும் 'லக்கி பாஸ்கர்' என துல்கர் சமீபமாகக் கதைத்தேர்வில் மிகுந்த கவன... மேலும் பார்க்க

Kubera: ``சேகர் கம்முலா நம்பிக்கையின் அடிப்படையில் படம் எடுப்பார், ஆனா நான்..'' - ராஜமௌலி

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்க... மேலும் பார்க்க

Kubera: ``1000, 2000 கோடி ஹீரோயின்'னு சொல்றது எல்லாத்தையும் மறந்துடுங்க'' - ராஷ்மிகா குறித்து தனுஷ்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்... மேலும் பார்க்க

``இங்கே நான் நிற்பதற்கு காரணம் என் அப்பாதான்; எங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டார்..''- தனுஷ் எமோஷனல்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்... மேலும் பார்க்க

Kubera: `யாருக்கு தான் கடன் பிரச்னை இல்ல; ரூ.150 சம்பாதிச்சாலும் பிரச்னைதான், 1 கோடி..' - தனுஷ்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப்... மேலும் பார்க்க

Rashmika: 'இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என புரிந்தது'- ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.குபேராஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இ... மேலும் பார்க்க