அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
Kumba Mela: `மாடலிங், நடிப்பில் நிம்மதியில்லை’ - கும்பமேளாவில் கவனம் பெறும் இளம் பெண் துறவி
உத்தபிரதேச கும்பமேளா..!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் பதுங்கி இருந்த பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி கூட கோர்ட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கும்பமேளாவிற்கு வந்துள்ளார்.
கும்பமேளாவில் சாதுக்கள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல துறவிகள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷா ரிசாரியா என்ற இளம் பெண் துறவி பக்தர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார். கும்பமேளாவில் மிகவும் அழகான துறவியாக கருதப்படும் ஹரிஷா தன்னை ஒருபோதும் துறவி என்று சொல்லிக்கொண்டதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் துறவிக்கான உடையணிந்து, ருத்ராட்ச மாலை அணிந்து கும்பமேளாவில் காணப்படுகிறார்.
அவரை பார்க்கும் பக்தர்கள் அவரின் போட்டோ, வீடியோவை எடுத்து அழகான துறவி என்றும், வைரல் துறவி என்றும் கூறி வருகின்றனர். 30 வயதாகும் அப்பெண் துறவி டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''நான் துறவி என்று ஒரு போதும் சொன்னது கிடையாது. இதை அடிக்கடி தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன். நான் சுவாமி மகாமண்டலேஷ்வர் சுவாமியின் பக்தை. நான் என்ன செய்யவேண்டும் என்று நினைத்தேனோ அதை விட்டுவிட்டேன். புதிய அடையாளத்திற்காக அனைத்தையும் கைவிட்டுவிட்டேன். நான் இப்போது அமைதியாக இருக்கிறேன்.
கும்பமேளா எனது ஆன்மீக பயணத்தின் முக்கிய பகுதியாகும். நான் இப்போது சனாதனம் மற்றும் மதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்"என்று கூறியுள்ளார். ஹர்ஷாவிற்கு இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் பாலோவர்கள் இருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை டிவி தொகுப்பாளர், மாடல், சோசியல் மீடியா பிரபலம் என பன்முகத்தன்மையுடன் விளங்கிய ஹர்ஷா திடீரென அதில் நிம்மதி கிடைக்காமல் அனைத்தையும் கைவிட்டுவிட்டு முற்றிலும் ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் என்கிறார்.
தங்கத்தில் ஜொலிக்கும் பாபா
கும்பமேளாவில் பக்தர்களை தங்கத்தில் ஜொலிக்கும் பாபா ஒருவரும் பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றார். எஸ்.கே.நாராயண கிரி மகாராஜ் என்ற அந்த சாமியார் உடம்பு முழுக்க 4 கிலோ தங்க ஆபரணங்களை அணிந்திருக்கிறார். எனவே அவரை பக்தர்கள் கோல்டன் பாபா என்று அழைக்கின்றனர். அவர் தன்னை பக்தர்கள் கோல்டன் பாபா என்று அழைப்பதை எதிர்க்கவில்லை. கைவிரல் முழுக்க மோதிரம், தங்க உத்தராட்ச நெக்லஸ், கைசெயின் என்று உடம்பில் எங்கும் தங்க ஆபரணங்களாக இருக்கிறது.
இது குறித்து நாராயண் கிரி கூறுகையில்,''தங்க ஆபரணங்களும் ஆன்மீக செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். நான் கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளேன்'' என்று கூறும் கிரி மகாராஜ் இப்போது டெல்லியில் தங்கி இருக்கிறார். கும்பமேளாவிற்காக தனது சீடர்களுடன் உத்தரப்பிரதேசம் வந்துள்ளார். அவரை பார்த்தவுடன் பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பது, செல்ஃபி எடுப்பது, வீடியோ எடுப்பது என்று இருக்கின்றனர்.
இதனால் அவரை சுற்றி எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. இதே போன்று மகாமண்டலேஷ்வர் அருண் கிரி நவரத்தின மோதிரங்கள், வைர கடிகாரம், கைசெயின் என்று 6.7 கிலோ அளவுக்கு தங்க ஆபரணங்களை உடம்பு முழுவதும் அணிந்திருக்கிறார். சுற்றுச்சூழல் ஆர்வலராக தன்னை காட்டிக்கொள்ளும் அருண் கிரி இது வரை ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார். கும்பமேளாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பழ மரக்கன்றுகளை பக்தர்களுக்கு கொடுத்துள்ளார். ஆதித்யநாத் என்ற மற்றொரு பாபா தனது உடம்பில் 5 கிலோ தங்க ஆபரணங்களை அணிந்திருக்கிறார். குஜராத் மாநிலம் பரோடாவை சேர்ந்த இந்த தங்க பாபா பசு பாதுகாப்பிற்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs