செய்திகள் :

Maaman: "அப்படிப்பட்டவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது" - இயக்குநர் மாரிசெல்வராஜ்

post image

வெற்றிமாறனின் `விடுதலை' படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி', `கருடன்' எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.

இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.

இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது.

மாமன்
`மாமன்

இவ்விழாவில் பேசிய மாரிசெல்வராஜ், "எனக்கும் சூரி அண்ணனுக்கும் எமோஷனலான ஒரு தொடர்பு இருக்கிறது. இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்தது போல ஒரு உணர்வு. பல இரவுகள் அவருடன் நான் பயணித்து இருக்கிறேன். சூரியின் உடல் மொழி, அவர் கதை கேட்கும் திறமை இதையெல்லாம் பார்த்து அவர் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று நான் பல முறை யோசித்து இருக்கிறேன்.

அப்படிப்பட்டவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது

வாழ்க்கையில் எதார்த்தமாக பயணிக்கக் கூடிய, இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் எப்போது கதாநாயகர்களாக ஆவார்கள் என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன். நான் கதை எழுதிய போது, சாதாரணமான ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது, நாம் ஒருவர் பெயரைச் சொல்லி இவர் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால், அந்த கதை டம்மி ஆகிவிடும்.

அப்படி இருக்கக்கூடிய காலகட்டத்தில் அனைத்தையும் சாத்தியமாக்கி இன்று சூரி கதாநாயகனாக மாறி இருக்கிறார். இதை நினைக்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு எனர்ஜி வந்தது போல நான் உணர்கிறேன். யாருமே நடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரு கதையை எடுத்துக்கொண்டு சூரியிடம் சென்றால் நிச்சயமாக அவர் நடித்துக் கொடுப்பார் என்கின்ற நம்பிக்கை பலருக்கு வந்திருக்கிறது. இன்னும் சூரி அடுத்தடுத்து பல திரைப்படங்களை நடிக்க வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

மாரி செல்வராஜ்

இந்த திரைப்படத்தில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன், "'விலங்கு' வெப் தொடர் வெளியீட்டுவிழாவில் நான் ஒரு ப்ளாப் டைரக்டர், விமல் ஒரு ப்ளாப் நடிகர் இருவரும் சேர்ந்து ஒரு வெப் சீரிஸை எடுத்து இருக்கிறோம், அதை பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்' என்றார். அதன்பின், ஒருவர் இந்த 'விலங்கு' வெப் தொடர்பு பற்றி என்னிடம் கூறினார். நான் 'மாமன்னன்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தினமும் இரவில் இந்தத் தொடரைப் பார்த்தேன். உண்மையில் ஒவ்வொரு எபிசோடிலும் திருப்பங்கள் இருந்தது. அதைப் பார்த்து நான் வியந்து போனேன், அதில் நான் யூகிக்க முடியாத பல விஷயங்கள் இருந்தது. இப்படிப்பட்ட ஒருவர் தற்போது மாமன் படத்தை இயக்கியிருக்கிறார்" என்று வாழ்த்துப் பேசி இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

RETRO: ரெட்ரோ வெற்றி; சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப்... மேலும் பார்க்க

Simran: "ஒரு பிரபலமாக வாழ்வது எளிதான விஷயமல்ல; காரணம்.." - குழந்தைகள் பற்றி கேள்விக்கு சிம்ரன் பதில்

சசிக்குமார், சிம்ரன் நடித்திருந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிம... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 03 : `கணவர்கிட்ட இருந்து தப்பிக்க வீட்டை சுத்தி ஓடியிருக்கேன்' - நடிகை ரதி பர்சன்ல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவ... மேலும் பார்க்க

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்? உண்மை என்ன?

'ராக்கி', 'சாணிக் காயிதம்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், அடுத்து லோகேஷுடன் கைகோர்க்கிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் ஒலிக்கிறது.ஆங்கில வெப்சீரீஸான Grotesquerie பாணியில் அ... மேலும் பார்க்க

Devayani: ``நானும் ராஜகுமாரன் சாரும் எங்க குழந்தைகளை மாத்தி மாத்தி பார்த்துக்குறோம்!'' - தேவயானி

தேவயானி நடிப்பில் உருவாகியிருக்கிற 'நிழற்குடை' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 2018-க்குப் பிறகு தேவயானி நடிக்கும் தமிழ் திரைப்படம் இது. இப்படத்தில் தேவையாணி ஈழ தமிழராக நடித்திரு... மேலும் பார்க்க

Simran: `30 வருட கரியரில் இதுதான் சிறந்த தருணம்; அஜித், விஜய்க்கு என்னுடைய..'- நெகிழும் சிம்ரன்

சிம்ரன் சமீபத்தில் வெளியான ‘அஜித்தின் குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சசிகுமாருக்கு ஜோடியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடித்திருந்தார். கடந்த மே1 ஆம் த... மேலும் பார்க்க