Manipur: `மணிப்பூரில் மீண்டும் அரசமைக்கத் தயார்...' - பாஜக தலைவர் கூறுவதென்ன?!
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அரசமைக்க 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங் தெரிவித்துள்ளார்.
இன்று 9 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ராஜ் பவன் சென்ற தோக்சோம் ராதேஷ்யாம் சிங், ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக எம்.எல்.ஏ கூறியதென்ன?
அரசமைப்பது பற்றி பேசிய தோக்சோம் ராதேஷ்யாம் சிங், "மக்கள் விருப்பப்படி ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ-க்கள் தயாராக இருக்கிறோம்.
இதனை ஆளுநரிடம் தெரியப்படுத்தியிருக்கிறோம். அத்துடன் இப்போது நிலவிவரும் பிரச்னைகளுக்குச் சாத்தியமான தீர்வுகள் பற்றி விவாதித்திருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தோக்சோம் ராதேஷ்யாம் சிங் மற்றும் மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஆட்சியமைக்கத் தயாராக இருந்தாலும், உரிமை கோருவது பற்றிய இறுதி முடிவை பாஜக மத்திய தலைமைதான் எடுக்கும் எனக் கூறியுள்ளார்.

அத்துடன் சபாநாயகர் சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துள்ளார் என்றும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
Manipur சட்டமன்றத்தின் நிலை என்ன?
மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரேன் சிங், கடந்த பிப்ரவரி அன்று ராஜினாமா செய்ததையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது.
மணிப்பூர் சட்டமன்றத்தில் உள்ள 60 இடங்களில் 59 இடங்கள் நிறைந்துள்ளன. ஒரு எம்.எல்.ஏ மறைந்ததால் ஒரு தொகுதியில் வெற்றிடம் உள்ளது.
அரசாங்கம் அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் 44 எம்.எல்.ஏ-க்களில் 32 மெய்தி எம்.எல்.ஏக்கள், 3 இஸ்லாமிய எம்.எல்.ஏக்கள் மற்றும் 9 நாகா எம்.எல்.ஏ-க்கள் அடங்குவர்.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே மெய்தி இனத்தவர்கள்.
60-ல் மீதமுள்ள 10 எம்.எல்.ஏ-க்களும் குக்கி இனத்தவர்கள். அவர்களில் 7 பேர் பாஜக (அரசமைக்க முன்வரவில்லை), 2 பேர் குக்கி மக்கள் கூட்டணி மற்றும் ஒருவர் சுயேட்சையில் வெற்றிபெற்றுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY