செய்திகள் :

Mannat : தாஜ்மஹால் போல... தன் ராணிக்காக மன்னர் கட்டிய `மன்னத்’ பங்களா - ஷாருக்கான் வாங்கியது எப்படி?

post image

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் கடற்கரையோரம் வசிக்கும் மன்னத் பங்களா மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். இக்கட்டிடத்தை பார்க்கவே தினமும் ஏராளமானோர் அங்கு வருகின்றனர். அவர்கள் மன்னத் கட்டிடத்திற்கு வெளியில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் சுற்றுலா மையமாகவே மாறிவிட்டது. இக்கட்டிடம் மிகவும் பழமையான ஒன்றாகும்.

மன்னத் பங்களா

18வது நூற்றாண்டில் கட்டப்பட்ட மன்னத் பங்களா பலரின் கைகளுக்கு மாறி இறுதியாக ஷாருக்கான் கைக்கு வந்திருக்கிறது. இந்த பங்களாவில் ரசிகர்களை பார்ப்பதற்காக பிரத்யேகமாக பால்கனி கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஷாருக்கான் இப்பால்கனியில் நின்று ரசிகர்களை பார்ப்பது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷாருக்கான் ரசிகர்களை பார்ப்பதை தவிர்த்து வருகிறார்.

தாஜ்மஹாலை போல..!

புராதான சின்னமாக கருதப்படும் மன்னத் பங்களாவில் எந்த ஒரு திருத்தம் செய்வதாக இருந்தாலும் அதற்கு மாநகராட்சியிடம் ஒப்புதல் பெறவேண்டும். தற்போது மன்னத் பங்களாவில் கூடுதல் மாடிகள் கட்ட திட்டமிட்டுள்ள ஷாருக்கான் இதற்காக குடும்பத்தோடு அருகில் உள்ள வீட்டிற்கு வாடகைக்கு குடியேறுகிறார். மன்னத் பங்களாவை 18வது நூற்றாண்டில் இந்திய மன்னர் ராஜா பிஜய் சென் தனது மனைவிக்காக கட்டினார். ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ராஜா பிஜய் சென் தாஜ்மஹாலை பார்த்துவிட்டு அது போன்ற ஒன்றை தனது மனைவிக்கு கட்டிக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் மன்னத் பங்களாவை கட்டினார்.

ஆனால் ராஜா 1902-ம் ஆண்டு காலமானார். இதையடுத்து அப்பங்களா 1915-ம் ஆண்டு பெரின் மானெக்ஜி பட்லிவாலா என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது. அவர் அந்த பங்களாவை வில்லா வியன்னா என்று பெயர் மாற்றம் செய்தார். பின்னர் அதனை குர்ஷிபாய் என்பவரிடம் விற்பனை செய்தார். குர்ஷிபாய் இறந்தபோது அவரது சகோதரி குல்பானு என்பவருக்கும், அதனை தொடர்ந்து குல்பானுவின் மகனுக்கும் சென்றது. கடைசியாக இந்த பங்களாவை நடிகர் சல்மான் கான் வாங்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவரது தந்தை சலீம் கான் நமக்கு இவ்வளவு பெரிய பங்களா எதற்கு என்று கூறிவிட்டார். இதனால் சல்மான் கான் அதனை வாங்கும் திட்டத்தை கைவிட்டார்.

ஷாருக்கான் வாங்கியது எப்படி?

1997ம் ஆண்டு ஷாருக்கான் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது பாடல் காட்சி மன்னத் பங்களாவில் படமாக்கப்பட்டது. உடனே அந்த பங்களா ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்துப்போனது. அப்போது இந்த வீட்டை ஒரு நாள் விலைக்கு வாங்குவேன் என்று ஷாருக்கான் சபதம் செய்து கொண்டார். 2001-ம் ஆண்டு ஷாருக்கான் சொன்னபடி மன்னத் பங்களாவை 13 கோடிக்கு விலைக்கு வாங்கினார். அதனை வாங்குவதற்கு ஷாருக்கானிடம் போதிய பணம் இல்லாமல் இருந்தது. உடனே தயாரிப்பாளர் ஒருவரிடம் அடுத்த படங்களில் நடித்துக்கொடுக்கிறேன் என்று சொல்லி பணத்தை முன்கூட்டியே வாங்கி மன்னத் பங்களாவை வாங்கினார்.

ஷாருக்கான் அப்பங்களாவை விலைக்கு வாங்கிய போது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனை பெரிய அளவில் பழுதுபார்க்கவேண்டியிருந்தது. ஷாருக்கான் தனது மனைவி கெளரியின் துணையோடு பங்களாவை புதுப்பித்தார். ரூ.13 கோடிக்கு வாங்கிய பங்களா இப்போது 200 கோடி மதிப்புடையதாக இருக்கிறது. இப்போது 6 மாடிகளுடன், நீச்சல் குளம், ஜிம், கார்டன் போன்ற வசதிகளுடன் இப்பங்களா இருக்கிறது. இதில் இப்போது மேலும் சில மாடிகள் கட்டப்பட இருக்கிறது. இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இப்பங்களா புதுப்பொலிவு பெற இருக்கிறது. அதற்காக தற்போது வேறு ஒரு குடியிருப்புக்கு மாறி இருக்கிறார் ஷாருக்!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Aamir khan : `அன்பான லைஃப் பார்ட்னரை தேடியபோது..!' - ஆமீர் கானிடம் காதலில் விழுந்தது குறித்து கெளரி

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். ஏற்கனவே இரண்டு பேரை காதலித்து அவர்களை திருமணம் செய்து விவாகரத்தான நிலையில் ஆமீர் கான் தனித்து வாழ்ந்து வந்தார். தற்போது தனது 6... மேலும் பார்க்க

Aamir Khan: ``எனக்கும் சல்மான் கானுக்கும் அதே ஆசைதான்'' - சொல்கிறார் ஆமீர் கான்

தனது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்குத் தனது புதிய துணையை அறிமுகப்படுத்தியிருந்தார் பாலிவுட் நடிகர் ஆமீர் கான். இதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தான அப்டேட்டையு... மேலும் பார்க்க

Aamir Khan: `25 ஆண்டுகள் நட்பு; லிவ் இன் உறவு, காதல் வாழ்க்கை...' -புதிய துணை குறித்து ஆமிர் கான்

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக செய்தி வெளியானது. அதனை ஆமிர் கானும் உறுதிபடுத்தினார். ஆமிர் கான் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நேற்று இரவே தனது க... மேலும் பார்க்க

அமீர் கான் வீட்டுக்கு வந்த ஷாருக், சல்மான் - களைகட்டிய 60-வது பிறந்தநாள் பார்ட்டி!

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நாளை 60வது பிறந்த நாளாகும். இப்பிறந்தநாளை ஆமீர் கான் தனது பாலிவுட் நண்பர்களுடன் சேர்ந்து முன்கூட்டியே கொண்டாடி இருக்கிறார். இதற்காக நேற்று இரவு நடிகர் சல்மான் கான், நடிக... மேலும் பார்க்க

Nadaaniyan Review: காதலனாக நடிக்க வரும் ஹீரோ; `நட்புக்காக' நாயகி - வொர்க் ஆகிறதா இந்த லவ் ஸ்டோரி?

டெல்லியிலுள்ள சர்வதேசப் பள்ளியில் படிக்கும் பணக்கார வீட்டுப்பெண் பியா ஜெய்சிங்குக்கு (குஷி கபூர்). பெற்றோரைவிட, சிறுவயதிலிருந்தே சகோதரிகளைப்போல ஒன்றாகப் பழகிய தோழிகள்தான் உயிர்; உலகமாக இருக்கிறார்கள்.... மேலும் பார்க்க

Kaun Banega Crorepati: ஓய்வு பெறும் அமிதாப்? - கோன் பனேகா குரோர்பதியை நடத்தப் போவது யார்?!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 2000ம் ஆண்டில் இருந்து இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் நடத்தி வருகிறார். அமிதாப் பச்சன... மேலும் பார்க்க