செய்திகள் :

Manoj Bharathiraja: "எங்கே அந்த வெண்ணிலா மனதில் ஓடிக்கொண்டிருந்தது..." - ரவிக்குமார் MP இரங்கல்

post image

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு பிரபரலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், "இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா

கடந்த சில நாட்களாக அவர் நடித்த படம் ஒன்றில் ஒலித்த எங்கே அந்த வெண்ணிலா பாடல் ஏனோ மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அந்தப் பாடலின் வீடியோவைப் பல முறை பார்த்தேன்.

மிகக் குறைந்த வயதில் மரணம் அவரைப் பறித்துக்கொண்டு போனது பெருந்துயரம். திரு பாரதிராஜா அவர்களை எதைச் சொல்லி ஆறுதல்படுத்த முடியும்?" என வேதனையைப் பகிர்ந்திருந்தார்.

 பாரதிராஜா இயக்கிய `தாஜ் மஹால்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அப்படத்திற்குப் பிறகு `சமுத்திரம்' திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பரிச்சயமான அவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மார்கழி திங்கள் படத்தின மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இவர் கடைசியாக கடந்தாண்டு வெளியான `ஸ்நேக் அன்ட் லாடர்ஸ்' வெப் சீரிஸில் நடித்திருந்தார். 

மனோஜ் பாரதிராஜா

48 வயதான மனோஜ் பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். 

மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு முதல் நாளை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

டேனியல் பாலாஜி : 'ஹீரோவாக வரக்கூடிய தகுதிகள் அத்தனையும் அவரிடம் இருந்தது' - நெகிழும் இயக்குநர்கள்

'காக்க காக்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. சென்ற வருடம் இதே நாளில் அவர் காலமானார். அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தும் போது, “தம்பி டேனியல... மேலும் பார்க்க

Vikram: விக்ரமிடம் கதை சொன்ன இயக்குநர்கள்; மடோன் அஸ்வின் பட அப்டேட்

சின்னதொரு போராட்டத்திற்குப் பின் வெளியான 'வீர தீர சூரன் பாகம் 2' படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்ரம். அவரது ரசிகர்கள் பலரும் இயக்குநர் அருண்குமாரை, 'சைலன்ட் ஃபேன்... மேலும் பார்க்க

What to watch on Theatre & OTT: வீர தீர சூரன், L2 Empuraan, Mufasa - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

வீர தீர சூரன் பாகம் 2 வீர தீர சூரன் பாகம் 2S.U. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பா... மேலும் பார்க்க

The Door Review: அதே பழிக்குப் பழி வாங்கும் ஹாரர் சினிமா! பாவனாவின் தமிழ் கம்பேக் கவனம் பெறுகிறதா?

கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா, தனது புதிய புராஜெக்ட் ஒன்றினைக் கட்டுவதற்காக அந்நிலத்திலிருக்கும் புராதன கோயில் ஒன்றை இடிக்கிறார்.அதைத் தொடர்ந்து மதுரையில் வக்கீலாக இருக்கும் அவரின் தந்தை பைக்கி... மேலும் பார்க்க