செய்திகள் :

Manoj Bharathiraja: பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்

post image

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா காலமானார். பாரதிராஜா இயக்கிய `தாஜ் மஹால்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அப்படத்திற்குப் பிறகு `சமுத்திரம்' திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பரிச்சயமான அவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் கடைசியாக கடந்தாண்டு வெளியான `ஸ்நேக் அன்ட் லாடர்ஸ்' வெப் சீரிஸில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர் மணி ரத்னத்திடம் `பாம்பே' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.

பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா

உதவி இயக்குநராக அனுபவம் கொண்ட இவர் `மார்கழி திங்கள்' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் பரிச்சயமானார். இவருக்கும் நடிகை நந்தனாவுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இன்று மாலை மனோஜ் பாரதிராஜா காலமாகியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா... உடைந்து போனேன்" - சிலம்பரசன் இரங்கல்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவை ஒட்டி திரைபிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Simbu, Manoj Bharathiraja அந்தவகையில் நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "அன்பு ந... மேலும் பார்க்க

PR04: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார்... 'PR04' பட பூஜை | Photo Album

PR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜைPR04 பட பூஜை மேலும் பார்க்க

Manoj Bharathiraja:`சிகப்பு ரோஜாக்கள் 2'-வில் ரஜினி மருமகன் ஹீரோ - இது மனோஜ் பாரதிராஜவின் பெருங்கனவு

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயற்கையை எய்தியிருக்கிறார். இதயப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த அவருக்கு திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரின் உ... மேலும் பார்க்க

மனோஜ் பாரதிராஜா: நல்ல கதை உனக்கு வச்சுருக்கேன்னு சொன்னாரு; இப்போ இப்படி ஆகிருச்சு - கலங்கும் சூரி

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (25.03.2025) காலமானார். இதய பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று ஓய்வில் இருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரின் மறைவிற்கு அரசியல்... மேலும் பார்க்க

மனோஜ் பாரதிராஜா: "மன அழுத்தம் அனைத்தையும் தாங்கிக் கொண்டு..." - திரைப் பிரபலங்கள் இரங்கல்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) மாரடைப்பால் மரணமடைந்தார்.அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்ற... மேலும் பார்க்க