செய்திகள் :

Mohanlal: Biography புத்தக அறிவிப்பு; பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மோகன்லாலின் ட்ரீட்!

post image

மலையாள திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'எம்புரான்' மற்றும் 'தொடரும்' ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து மோகன்லாலின் பெருமையை தக்கவைத்திருக்கிறது.

அந்த மலையாள சேட்டனுக்கு இன்று (மே 21) 65-வது பிறந்தள். திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மோகன்லால்
மோகன்லால்

இந்த நிலையில், மோகன்லால் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அன்புள்ளவரே, எனது பிறந்தநாளில் மிகுந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பானு பிரகாஷ் எழுதிய எனது வாழ்க்கைக் கதை 'Mukharagam' என்றத் தலைப்பில் புத்தகமாக வெளியாகிறது.

இந்த புத்தகத்தை, மாத்ருபூமி பதிப்பகம் வெளியிடுகிறது. மலையாளத்தின் என் விருப்பமான எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் அதில் முன்னுரை எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் 47 வருட எனது சினிமா வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. எனது வாழ்க்கையை வார்த்தைகளாக எழுதி மொழிபெயர்க்க பானு பிரகாஷ் மேற்கொண்ட முயற்சிகள் மிகப் பெரியது. இந்த புத்தகம் டிசம்பர் 25, 2025 அன்று வெளியிடப்படும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மோகன்லால் - Mohanlal

மேலும், அவரின் அந்த வீடியோவுடன் சிலப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார். அதில், ``விஸ்வசந்தி அறக்கட்டளை" ஒரு ஹீரோவாக இருங்கள்" என்ற தலைப்பில் ஒரு வருட கால போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்கிறது. எனவே, கனவு காண்பதும் வெற்றிகரமான வாழ்க்கையை அடைவதும் ஒருவர் பெறக்கூடிய மிகப்பெரிய உயரமாகும்.

போதைப்பொருளுக்கு எதிரான இந்த பயணத்தில் நமது இளைஞர்களுடன் நாம் உறுதியாக இருப்போம். போதைப்பொருட்களுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு ஹீரோவாக இருப்போம்.

அதைப் பயன்படுத்த மாட்டோம், நம் அன்புக்குரியவர்களும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம். போதைப்பொருட்களுக்கு நோ சொல்லுங்கள்..!!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

HBD Mohanlal: இந்த தமிழ் படங்கள் இவர் படத்தோட ரீமேக்கா? மோகன்லால் படங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

ஜெயிலர் படத்துல ரெண்டு சீன் வந்தாலும் தன்னோட கெத்து மேனரிஸத்தால ரெண்டு சீனையும் அள்ளி தின்னுட்டு போனவரு நம்ம லாலேட்டன் மோகன்லால். லால பத்தி சொல்லணும்னா, 'நம்ம ஊர்ல எப்படி நம்ம ரஜினியோ, அவுங்க ஊர் கேரள... மேலும் பார்க்க

Cannes 2025: ``அது எனக்கு பலமாக இருந்தது!'' - கேன்ஸ் பட விழாவில் ஜூரியாக பயால் கபாடியா!

78-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நேற்றைய தினம் தொடங்கியது. கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்று பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குநர் பயால் க... மேலும் பார்க்க

Dies Irae: மிரட்டும் திகிலுடன் வருகிறது `டைஸ் ஐரே' - பிரமயுகம் இயக்குநரின் அடுத்தப் படைப்பு!

2024-ம் ஆண்டின் சிறந்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது பிரமயுகம். இந்தப் படத்தில், மம்மூட்டியின் நடிப்பு, திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை சிறப்பாக அமைந்ததாகக்... மேலும் பார்க்க

New Wave In Mollywood: இதுசவாலை தாண்டி உச்சம் தொட்ட `மல்லுவுட்’டின் கதை!

கடந்தாண்டு வெளியான படங்களின் மூலம் ஒரு புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது மலையாள சினிமா. பெரிதும் எதிர்பார்க்காத நேரத்தில் 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்', 'ப்ரமயுகம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாக... மேலும் பார்க்க

Mysskin:`மிஷ்கினை வரவேற்கும் மலையாள திரையுலகம்' - துல்கர் சல்மான் படத்தில் ஒப்பந்தம்

திரைப்பட இயக்குநர்,தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல்வேறு திரைத்துறைகளில் ஆளுமை செலுத்திவரும் மிஷ்கின் நடிகராகவும் மக்கள் மனதில் பெரும் இடத்தைப் பிடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிராகன்... மேலும் பார்க்க