செய்திகள் :

Operation Sindoor: "இரு நாடுகளையும் நன்கு தெரியும்; அவர்கள்..." - இந்தியா - பாக். குறித்து ட்ரம்ப்

post image

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நேற்று முன்தினம் (அமெரிக்க நேரப்படி), அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இது ஒரு அவமானம்" என்று பதிலளித்திருந்தார்.

மீண்டும், நேற்று ட்ரம்பிடம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து கேட்கப்பட்டது.

"இது மிகவும் மோசமானது. நான் இரு நாடுகளுடனும் நல்ல உறவில் இருக்கிறேன். எனக்கு இரு நாடுகளையும் நன்கு தெரியும். அவர்கள் இதைச் சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

இருவருமே இதை நிறுத்த வேண்டும்.பழிக்குப் பழி நடந்துவிட்டது. இப்போது அவர்களால் இதை நிறுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

trump
donald trump - டொனால்ட் ட்ரம்ப்

இரு நாடுகளுடனும் இணைந்து நாம் நன்கு செயல்பட்டு வருகிறோம். என்னால் எதாவது முடிந்தால், நிச்சயம் அதை நான் செய்வேன்" என்று பேசியுள்ளார் ட்ரம்ப்.

கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் ட்ரம்ப். மேலும், 'இந்தியாவுடன் இருக்கிறோம்' என்று ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, 'இது ஒரு அவமானம். சீக்கிரம் இது முடியும் என்று நம்புகிறேன்' என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

"தனியார் துறைகள், நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு வேண்டும்" - பாமக மாநாடு தீர்மானங்கள் ஹைலைட்ஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தையடுத்த திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது. இன்று மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய மாநாட்டில், இசை, நடன கலைநி... மேலும் பார்க்க

Operation Sindoor: "100 தீவிரவாதிகள், 40 பாக் ராணுவத்தினர் மரணம்" - முப்படை அதிகாரிகள் கூறியதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். 100... மேலும் பார்க்க

Ukraine: "அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்..." - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?

ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிப்பது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் விளாதிமிர் புதின்.இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா இறுதியாக, போருக்கு முற்றுப்... மேலும் பார்க்க

திராவிட மாடல் அரசின் முதன்மைத் திட்டங்கள்; ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள், மாணவர் சேர்க்கையில் முதலிடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை, மின்னணு ஏ... மேலும் பார்க்க

Operation Sindoor முடியவில்லையா? - விமானப்படை சொல்வதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்-பதற்றம் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

India - Pakistan: `அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க வேண்டும்' - ராகுல் காந்தி கடிதம்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான... மேலும் பார்க்க