செய்திகள் :

Operation Sindoor: பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்; முறியடித்த இந்தியா - ராணுவம் சொல்வதென்ன?

post image

அணு ஆயுத பலம் பொருந்திய இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு (08/05/2025) மற்றும் இன்று காலையில் (09/05/2025) ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.

பாகிஸ்தான் தாக்குதல்
பாகிஸ்தான் தாக்குதல்

இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்ட எனக் கூறியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது.

இரு நாடுகளும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்கள், வான்வழி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிலும் இணைந்து சுமார் 4 டஜன் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. எனினும் பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறது.

பாகிஸ்தான் பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறிய தாக்குதலில் ஈடுபட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. மீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் ட்ரோன் தாக்க்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆனால், "பஞ்சாப் மாநிலம் பதான்கோட், காஷ்மீரில் ஶ்ரீநகர் பள்ளத்தாக்கு, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மார் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தவில்லை" என பாகிஸ்தான்தெரிவித்துள்ளது.

"தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அரசியல் நோக்கம் கொண்டவை" என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க

``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!

நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்... மேலும் பார்க்க

Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளேகிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீர... மேலும் பார்க்க

``தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்திரிகை செய்தியில்,"ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாள... மேலும் பார்க்க